அகமதுநகர் சுல்தானகம்

From Wikipedia, the free encyclopedia

அகமதுநகர் சுல்தானகம்
Remove ads

அகமதுநகர் சுல்தானகம் (Ahmadnagar Sultanate) தென்னிந்தியாவின் வடமேற்கு தக்காணப் பீடபூமியில், குஜராத் சுல்தானகத்திற்கும், பிஜப்பூர் சுல்தானகத்திற்கும் இடைய உள்ள நிலப்பரப்புகளை 1490 முதல் 1636 முடிய ஆட்சி செலுத்தியது. இது தக்காணத்தில் இருந்த ஐந்து சுல்தானகங்களில் ஒன்றாகும். பிற தக்காண சுல்தானகங்கள்; பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகம் ஆகும்.

விரைவான உண்மைகள் அகமதுநகர் சுல்தானகம்நிசாம் சாகி வம்சம், தலைநகரம் ...

இச்சுல்தானகம் பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சி காலத்தில் 1490ல் மாலிக் அகமது என்பவரால் நிறுவப்பட்டது.

அகமதுநகர் சுல்தானகத்தின் துவக்க காலத்தில் ஜூன்னார் முதல் தலைநகராக விளங்கியது. ஜூன்னார் என்ற பெயரை பின்னர் சிவனேரி என மாற்றினர்.

நிசாம் சாகி வம்சத்தின்[3] மாலிக் அகமது தனது பெயராய் அகமதுநகரை நிறுவி அதனை தமது சுல்தானகத்தின் தலைநகராகக் கொண்டார்.[4] [5]

அகமது சுல்தானியர் 1499ல் தௌலதாபாத் நகரத்தையும், 1574ல் பேரர் சுல்தானகத்தையும் கைப்பற்றினர்.

1636ல் முகலாயப் பேரரசின் தக்காண ஆளுநர் அவுரங்கசீப் அகமதநகர் சுல்தானகத்தை வென்று முகலாயப் பேரரசில் இணைத்தார்.

Remove ads

வரலாறு

அகமத்நகர் சுல்தானகத்தை நிறுவிய மாலிக் அகமதின் தந்தை நிசாம் உல் முல்க் மாலிக் ஹசன் பகாரி, உண்மையில் ஒரு இந்து பிராமணர் ஆவார்.[6]:189 நிசாம் சாகி வம்சத்தை நிறுவிய மாலிக் அகமது, தான் நிறுவிய அகமத்நகரை, அகமத்நகர் சுல்தானகத்திற்கு தலைநகராக்கினார்.

தலிகோட்டா சண்டை

Thumb
தலிகோட்டா சண்டை

26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் அகமத்நகர் சுல்தான் முதலாம் உசைன் நிசாம் ஷா உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

முதலாம் உசைன் நிசாம் ஷாவின் மனைவி சந்த் பீபி, கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பிஜப்பூர் சுல்தானகம் ஆகியவைகளுடன் கூட்டு சேர்ந்து அவுரங்கசீப்பின் முகலாயப் பேரரசின் படைகளை எதிர்த்து நின்றார்.

Remove ads

அகமதுநகர் சுல்தான்கள்

நிசாம் சாகி வம்சத்தின் கீழ்கண்ட சுல்தான்கள் அமகதுநகர் சுல்தானகத்தை ஆண்டனர்.[7]

  1. முதலாம் அகமது நிசாம் ஷா 1490–1510
  2. முதலாம் புர்கான் நிசாம் ஷா 1510–1553
  3. முதலாம் உசைன் நிசாம் ஷா 1553–1565
  4. முதலாம் முர்தாஜா நிசாம் ஷா 1565–1588
  5. இரண்டாம் நிசாம் ஷா 1588 –1589
  6. இஸ்மாயில் நிசாம் ஷா 1589–1591
  7. இரண்டாம் புர்கான் நிசாம் ஷா 1591–1595
  8. இப்ராகிம் நிசாம் ஷா 1595–1596
  9. இரண்டாம் அகமது ஷா 1596
  10. பகதூர் நிசாம் ஷா 1596–1600
  11. இரண்டாம் முர்தஜா நிசாம் ஷா 1600–1610
  12. மூன்றாம் புர்கான் நிசாம் ஷா 1610–1631
  13. மூன்றாம் உசைன நிசாம் ஷா 1631–1633
  14. மூன்றாம் முர்தஜா நிசாம் ஷா 1633–1636

இதனையும் காணக

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads