அகிலத்திரட்டு அம்மானை

From Wikipedia, the free encyclopedia

அகிலத்திரட்டு அம்மானை
Remove ads

'அகிலத்திரட்டு அம்மானை' பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவழியின் புனித நூலாகும். இதனை சுருக்கமாக அகிலம் என்றும் அழைப்பர். இது அய்யாவழி புராண வரலாற்றின் தொகுதியாகவும் விளங்குகிறது. அம்மானை வடிவில் இயற்றப்பட்ட நூல்களுள் மிகப்பெரியதான அகிலம், கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி இறைவனால் அருளப்பட்டு, அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[1][2][3]

இது சார்பு கட்டுரைகளின் பாகமான
அய்யாவழி
Thumb
அய்யாவழியின் வரலாறு
கோட்பாடுகள்

ஏகம்- அடிப்படை ஒருமை
வேதன்-படைப்பாளர்

வைகுண்டர்-அவதாரம்
அய்யாவழி மும்மை

புனித நூல்கள்

அகிலத்திரட்டு அம்மானை
விஞ்சையருளல்
திருக்கல்யாண இகனை
அருள் நூல்

வழிபாட்டுத்தலங்கள்

சுவாமிதோப்பு பதி
பதிகள்
நிழல் தாங்கல்கள்

சமயவியல்

அய்யாவழி புத்தகங்கள்
அய்யாவழி அமைப்புகள்

சமயச்சடங்குகள்

முதன்மை போதனைகள்

சார்ந்த நம்பிக்கைகள்

அத்வைதம்
சுமார்த்தம்

Remove ads

வரலாறு

அகிலத்திரட்டு அம்மானை ஆகமத்தை அய்யா அருள அரிகோபால சீடர் தாமரைகுளம்பதியில் இருந்து எழுதினார். அகிலத்தைப்பற்றி சீடர் அரி கோபாலன் கூறும் போது, இறைவனை பணிந்து இரவு தூங்கும் பொழுது இறைவன் அவரருகில் சென்று அகிலத்தின் முதற்பகுதியான 'காப்பு' பகுதியின் முதல் சீரான 'ஏர்' -ஐ கூறி மீதிப்பகுதியை 'உன் மனதின் அகமிருந்து கூறுவேன்' என்றதாக கூறுகிறார். ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பனை ஓலையில் பாதுகாக்கப்பட்டு வந்த அகிலத்திரட்டு அம்மானை பொ.ஊ. 1939-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

ஆகிலத்தின் படி இந்நூல் இறைவன் கலி யுகத்தை மாற்றி தர்ம யுகத்தை மலரச்செய்யும் பொருட்டு உலகில் அவதரித்த காரண-காரியத்தை கூறுவதாகும். இது வைகுண்டரைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளையும், சம்பவங்களையும் புது வடிவம் கொடுக்கப்பட்ட பழைய இந்து புராணங்களுடனும், இதிகாசங்களுடனும் இணைத்து, வேதம் முதலிய அனைத்து சாஸ்த்திரங்களுடைய கருத்துக்களின் தொகுதியாக விளங்குகிறது. இது உலகம் தோன்றியது முதல் தர்ம யுகம் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் அய்யா நாராயணர் அன்னை லெட்சுமி தேவியிடம் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.

அகிலம் அரி கோபாலன் சீடரால் இயற்றப்பட்டாலும் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அவருக்கு தெரியாது. அவர் ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அய்யா வைகுண்டம் சென்றதும் அது வரை திறக்கப்படாத ஏடு கட்டவிழ்க்கப்பட்டது. அப்போது அதிலே அய்யாவழிக்கான வழிமுறைகள் கூறப்பட்டிருந்தன. அதைப்பின்பற்றி சீடர்கள் அய்யாவழியை பரப்பலாயினர்.

Remove ads

நூல் மற்றும் எழுத்து முறை

அகிலம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் தோன்றியது முதல் வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு வரையிலான சம்பவங்கள் முதல் பகுதியாகவும், வைகுண்ட அவதாரம் முதல் வைகுண்டர் துதி சிங்காசனத்தில் இருந்து ஈரேழுலகையும் ஆளும் தர்ம யுகம் வரையுலான நிகழ்வுகள் இரண்டாம் பகுதியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அகிலம் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டிருக்கிறது. இதில், அம்மானை முறையில் அதிகமாக கையாளாப்படும் இரு எழுத்து முறைகளான விருத்தம் மற்றும் நடை பெரும்பாலான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வெண்பா, முதலிய பல இலக்கண முறைகள் அகிலத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

Remove ads

நூல் பகுப்பு

Thumb
அகிலத்திரட்டு அம்மானை

படிப்போரின் வசதிக்காக அகிலம், பதினேழாக பகுக்கப்பட்டுள்ளது. அகிலம் ஒன்று, இரண்டு, மூன்று... என்றவாறு பெயரிடப்பட்டுள்ளன.

அகிலம் ஒன்று

அகிலத்திரட்டின் முதற்பகுதியான அகிலம் ஒன்று மூன்று நீதம், மற்றும் நீடிய யுகம், சதுர யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம் ஆகிய நான்கு யுகங்கள் பற்றிய செய்திகளை கூறுவதாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காப்பு, அரிகோபாலன் சீடரின் அவையடக்கம் உட்பட பல பகுதிகள் இதனுள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads