அக்டினோட்டெரிகீயை

From Wikipedia, the free encyclopedia

அக்டினோட்டெரிகீயை
Remove ads

அக்டினோட்டெரிகீயை (Actinopterygii), என்பது நடுமுள் துடுப்புள்ள மீன்களைக் குறிக்கும். இம் முதுகுநாணி மீன்களின்(Osteichthyes)[1][2] ஒரு வகுப்பு ஆகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை அக்டினோட்டெரிகீ வகுப்பு முதுகுநாணிகளுள் முக்கியமான ஒரு வகுப்பு ஆகும். 30,000க்கு மேற்பட்ட மீன் இனங்களுள் ஏறத்தாழ 99% இனங்கள் அக்டினோட்டெரிகீயை வகுப்புக்குள் அடங்குகின்றன.[3] இவ் வகுப்பைச் சேர்ந்த மீனினங்கள், நன்னீரிலும், கடல் சூழல்களிலும், ஆழமான கடல் பகுதிகளில் இருந்து மலையுச்சிச் சிற்றாறுகள் வரை எங்கும் பரவிக் காணப்படுகின்றன. அளவைப் பொறுத்தவரை, 8 மில்லிமீட்டரே நீளம் கொண்ட பீடொசிப்பிரிசு இனத்திலிருந்து, 2300 கிலோ கிராம் நிறை கொண்ட பெருங்கடல் சூரியமீன் (Ocean Sunfish), 11 மீட்டர் நீளம் கொண்ட ஓர்மீன் (Oarfish) வரையில் பல்வேறு வகையான இவ்வகுப்பில் உள்ளன.

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, துணைவகுப்புக்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads