அஞ்சரகண்டி ஆறு

இந்திய ஆறு From Wikipedia, the free encyclopedia

அஞ்சரகண்டி ஆறுmap
Remove ads

அஞ்சரகண்டி ஆறு (Anjarakandi River) இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறாகும். கண்ணூர் மாவட்டம் வழியாகப் பாயும் இரண்டு முக்கிய ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் இருந்து இந்த ஆறு உருவாகிறது.[1] 48 கி.மீ நீளமுள்ள இந்த ஆறு மேற்கு திசையில் பாய்ந்து தர்மடம் என்ற இடத்தில் அரபிக் கடலில் கலக்கிறது.[2][3]

விரைவான உண்மைகள் அஞ்சரகண்டி ஆறு Anjarakandi River, அமைவு ...
Remove ads

நதியின் பாதை

அஞ்சரகண்டி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களின் எல்லையில் உருவாகிறது. பின்னர் இந்த ஆறு நெடும்போயில், கண்ணவம், செருவாஞ்சேரி, மணத்தேரி, கண்டங்குன்னு, சித்தரிப்பரம்பா மற்றும் வெங்கூர் ஆகிய மலைப்பாங்கான நகரங்கள் வழியாகப் பாய்கிறது.[4] மட்டனூர் ஆறு மற்றும் பேராவூர் ஆறு போன்ற பல சிறிய துணை ஆறுகள் இந்த பகுதியில் அஞ்சரக்கண்டியுடன் இணைகின்றன. பின்னர் அஞ்சரக்கண்டி ஆறு மலைப்பாங்கான நிலப்பரப்பிலிருந்து மலபார் சமவெளியில் பாய்ந்து, கீழலூர், படுவிளையாயி, அஞ்சரகண்டி, பெரலசேரி, கீழத்தூர், மாம்பரம் மற்றும் பாலயாடு வழியாகச் சென்று தர்மடமை அடையும் போது அரபிக்கடலில் கலக்கிறது.

Remove ads

பெயர்

கண்ணூர் மாவட்டத்தின் அஞ்சரக்கண்டி கிராமத்தின் வழியாக அஞ்சரகண்டி ஆறு பாய்கிறது.[5] இந்த இடம் அதன் இலவங்கப்பட்டை தோட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

படக் காட்சியகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads