அதிராவ் பிராந்தியம்

From Wikipedia, the free encyclopedia

அதிராவ் பிராந்தியம்map
Remove ads

அதிராவ் பிராந்தியம் (Atyrau Region, காசாக்கு: Атырау облысы , Atyraý oblysy , اتىراۋ وبلىسى ; Russian ) முன்னர் Gur'yev (எனப்படும் சோவியத் குர்யெவ்ஸ்காயா ஒப்லாஸ்ட் மாகாணம்), என்பது கஜகஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கில் காஸ்பியன் கடலின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அதிராவ் நகரமாகும். இந்த நகரில் 142.500 மக்கள் வசிககின்றனர். இப்பிராந்தியததின் மக்கள் தொகை 480,000 ஆகும். மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானவர்கள் கசக்குகள் ஆவர்.

விரைவான உண்மைகள் அதிராவ் பிராந்தியம் Атырау облысыАтырауская область, நாடு ...
Remove ads

வரலாறு

அதிராவ் பிராந்தியத்தின் துரான் தாழ்நிலப் பகுதிகள் பழங்காலத்தின் மல்கர் "ஹன்" வம்சங்களின் தாயகமாக இருந்தது.

நிலவியல்

118,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த பிராந்தியமானது கஜகஸ்தானில் இரண்டாவது மிகச்சிறிய பிராந்தியம் ( துருக்கிஸ்தான் பகுதி மிகச் சிறியது) ஆகும். இது மேற்கில் உருசியா ( அஸ்திரகான் ஒப்லாஸ்ட் ), கிழக்கில் சக கசாக் பகுதிகளான அக்டோபே, தெற்கே மங்கிஸ்டாவ் மற்றும் வடக்கே மேற்கு கஜகஸ்தான் பகுதி ஆகியவற்றின் எல்லையாக உள்ளன. உரால் ஆறு என்பது ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான எல்லையாகும். மேலும் உருசியாவிலிருந்து காஸ்பியன் கடலுக்கு இப்பகுதி வழியாக பாய்கிறது. அதாவது மேற்கு அதிராவ் பிராந்தியம் ஐரோப்பாவில் உள்ளது.

இப்பகுதியின் பெரும்பகுதி எண்ணெய் வளமான காஸ்பியன் தாழ்நிலத்தில் அமைந்துள்ளது. டெங்கிஸ் எண்ணை வயல் மற்றும் காஷகன் எண்ணை வயல் போன்ற பகுதிகளில் பல எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் ஒரு எண்ணெய் குழாய் இணைப்பு உருசியாவின் குழாய் அமைப்பில் இணைய அட்ராவ் முதல் உருசியாவின் சமாரா வரை செல்கிறது. டெங்கிஸ் எண்ணை வயலில் இருந்து உருசிய கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் வரை ஒரு தனி எண்ணெய் குழாய் செல்கிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, அதிராவ் பிராந்தியத்தின் மக்கள் தொகை 645,280 ஆகும். [2]

இனக்குழுக்கள் (2020): [3]

  • கசாக் : 92.72%
  • உருசியர் : 5.14%
  • மற்றவர்: 2,14%

நிர்வாக பிரிவுகள்

இப்பிராந்தியம் ஏழு மாவட்டங்களாகவும், அதிராவ் மாநகரமப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள்: [4]


குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads