அஸ்திரகான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஸ்திரகான் மாகாணம் (Astrakhan Oblast, உருசியம்: Астраха́нская о́бласть, அஸ்திரகான்ஸ்கயா ஓபிலஸ்து) என்பது உருசியாவின் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் தலைநகரம் அஸ்திரகான் ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை 1,010,073 (2010 கணக்கெடுப்பு).[9]
Remove ads
புவியியல்
அசுத்திரகான் மாகாணம் தெற்கு நடுவண் மவ்வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே காசுப்பியன் கடலும், கிழக்கே கசக்ஸ்தானும், வடக்கே வோககிராத் வட்டாரமும், மேற்கே கால்மீக்கியா குடியரசும் உள்ளன.
வரலாறு
இம்மாகாணம் 1943 டிசம்பர் 27 இல் அமைக்கப்பட்டது.[13] 1980 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியம் இங்கு அஸ்திரகான் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் பல அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டது.
மக்கள்
2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இங்கு 1,010,073 பேர் வாழ்கின்றனர்.[9] இவர்களில் 67.6% உருசியர்களும், 16.3% கசக்குகளும், 6.6% தத்தார்களும் ஆவர்.
2012 அதிகாரபூர்வ கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகையின் 46% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுபவர்கள் ஆவர். 4% கிழக்கு மரபுவழி திருச்சபையையும், 2% பொதுக் கிறித்தவர்களும் ஆவர். 14% முஸ்லிம்கள்.[14]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads