அந்தியூர்
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்தியூர் (ஆங்கிலம்:Anthiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர் வட்டம் மற்றும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமைடமும், பேரூராட்சியும் ஆகும். அந்தியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அந்தியூரின் மையப் பகுதியில் காமராசர் பேருந்து நிலையமும்“ வார சந்தையும், பத்ரகாளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. அந்தியூர் வெற்றிலை மிகவும் பெயர் பெற்றதாகும். வேளாண்மையே இவ்வூரின் முதன்மையான தொழிலாகும். இவ்வூர் குருநாதசுவாமி பண்டிகைக்கு பிரபலமானது.
Remove ads
அமைவிடம்
அந்தியூர் பேரூராட்சிக்கு கிழக்கே ஈரோடு 33 கி.மீ.; மேற்கே கோபிச்செட்டிப்பாளையம் 25 கி.மீ.; வடக்கே மேட்டூர் 39 கி.மீ.; தெற்கே திருப்பூர் 70 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
3.24 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 85 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,044 வீடுகளும், 21,086 மக்கள்தொகையும் கொண்டது.[6]
ஆன்மீகத் தலங்கள்
இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும். அந்தியூருக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் மலைக்கருப்புசாமி கோவில் உள்ளது. சித்திரை மாதம் திருவிழா நடக்கும்.அப்போது மடப்பள்ளி அமைந்திருக்கும் கரட்டுப்பாளையத்திலிருந்து கருப்புசாமி , தவசியப்பன் மற்றும் முனியப்பன் ஆகிய சாமிகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டு நாட்கள் மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.அதுசமயம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் திருவிழாவிற்கு வந்து பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செய்து வழிபடுவார்கள்.
Remove ads
நீர்வளம்

இவ்வூரில் வரட்டுப்பள்ளம் என்ற அணை உள்ளது. மேலும் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி , எண்ணமங்கலம் ஏரி ஆகிய ஏரிகளும் உள்ளன.
படத்தொகுப்பு
- அருள்மிகு குருநாதசுவாமி திருஉருவம்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
