அனந்தபூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனந்தபூர் (Anantapur) (அதிகாரப்பூர்வமாக: அனந்தபுராமு [1] ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தின் தலைநகராகும். இது அனந்தபுராமு மண்டலத்தின் மண்டல தலைமையகமாகவும், அனந்தபூர் வருவாய் பிரிவின் பிரதேச தலைமையகமாகவும் உள்ளது.[2] நகரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது 1799 இல் தத்தா மண்டலத்தின் (ஆந்திராவின் இராயலசீமா மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம்) தலைமையகமாகவும் இருந்தது. இது இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய இந்திய இராணுவத்திற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையாகவும் இருந்தது.
Remove ads
நிலவியல்
அனந்தபூர் 14.68°N 77.6°E இல் அமைந்துள்ளது.[3] இதன் சராசரி உயரம் 335 மீட்டர் ஆகும் . இது ஐதராபாத்திலிருந்து 356 கி.மீதொலைவில் அமைந்துள்ளது,விஜயவாடாவிலிருந்து இருந்து 484 கி.மீ., மற்றும் பெங்களூரிலிருந்து 210 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
காலநிலை
அனந்தபூர் அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது, ஆண்டின் பெரும்பகுதி வெப்பமான மற்றும் வறண்ட சூழ்நிலைகளைக் கொண்டுள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் கோடைக்காலம் தொடங்கி மே மாதத்தில் உச்சநிலை 37 °C (99 °F) அடைகிறது. அனந்தபூருக்கு மார்ச் மாத தொடக்கத்தில் மழைக்காலத்திற்கு முந்தைய மழை பெய்யும், முக்கியமாக கேரளாவிலிருந்து வடகிழக்கு காற்று வீசுகிறது. பருவமழை செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து நவம்பர் தொடக்கம் வரை மழைப்பொழிவு 250 mm (9.8 அங்) வரை நீடிக்கும் . வறண்ட மற்றும் லேசான குளிர்காலம் நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி பிப்ரவரி ஆரம்பம் வரை நீடிக்கும்; சிறிய ஈரப்பதம் மற்றும் சராசரி வெப்பநிலையுடன் 22–23 °C (72–73 °F) இருக்கும். மொத்த ஆண்டு மழை சுமார் 22 அங் (560 mm) ஆகும் .
Remove ads
தட்பவெப்ப நிலை
Remove ads
மக்கள் தொகை
2011ம் ஆண்டின் தொகை கணக்கெடுப்புப்படி , அனந்தபூர் நகரத்தின் மக்கள் தொகை 262,340 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் மற்றும் மக்கள் தொகையில் 9% 6 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர்.[5] கல்வியறிவு 82%, ஆண் கல்வியறிவு 89%, பெண் கல்வியறிவு 75%. தெலுங்கு மொழி உத்தியோகபூர்வ மற்றும் பரவலாக பேசப்படும் மொழி ஆகும்.
பொது பயன்பாடுகள்
அனந்தபூர் குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை ஆகியவை சுத்தமான குடிதண்ணீரை வழங்குவதில் முன்னேறி, முக்கியமாக புளூரோசிஸை ஒழிப்பதில் கவனம் செலுத்துகின்றன.[6] நகரத்தில் அமைந்துள்ள கோடைகால சேமிப்பு தொட்டியில் இருந்து நகரத்திற்கு ஆசலனேற்ற தண்ணீரை மாநகராட்சி வழங்குகிறது.
கலாச்சாரம்
அரசியல், திரைப்படத் துறை மற்றும் பிற துறைகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகளுடன் ஊரிலிருந்து குறிப்பிடத்தக்க சில நபர்கள் உள்ளனர். நீலம் சஞ்சிவ ரெட்டி இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியாகவும், ஆந்திராவின் முதல் முதல்வராகவும் இருந்தவர், அனந்தபூர் அனந்தபூர் மக்களவைத் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பைடி லட்சுமயா இருந்தார்; கல்லூர் சுப்பா ராவ் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் ஆந்திர சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராக இருந்தார்; கதிரி வெங்கட ரெட்டி ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர், சத்ய சாய் பாபா, இந்து ஆன்மீகத் தலைவர் ; பெல்லாரி ராகவா ஒரு இந்திய நாடக ஆசிரியர், தெஸ்பியன் மற்றும் திரைப்பட நடிகர் ஆகியோர் குறிப்பிடதக்கவர்கள் ஆவர்.
Remove ads
உணவு
சோளம், கம்பு, ராகி போன்ற தினை உணவு உணவுகள் பெரும்பாலும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன
மேலும் காண்க
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads