ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா, 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசம் உருவானது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி, 30 மே 2019 முதல் பதவியில் உள்ளார்.

Remove ads
ஆந்திர மாநில முதலமைச்சர்கள்
சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அடங்கிய இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளைக் கொண்டு 1953இல், ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.
= முதல்வரின் கட்சி- இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) | = முதல்வரின் கட்சி - தெலுங்கு தேசம் கட்சி (தெ.தே) | = முதல்வரின் கட்சி - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (ஒய். எஸ். ஆர்) |
Remove ads
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்

1956இல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் குல்பர்கா மற்றும் அவுரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலம் அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள், ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.
# | பெயர் | படம் | தொடக்கம் | முடிவு | கட்சி | சொந்தபகுதி | பிறந்த இடம் |
பதவியில் இருந்த நாட்கள் | |
1 | நீலம் சஞ்சீவ ரெட்டி | ![]() |
1 நவம்பர் 1956 | 11 ஜனவரி 1960 | இதேகா | இராயலசீமை | அனந்தபூர் | 1167 நாட்கள் | |
2 | தாமோதரம் சஞ்சீவய்யா | ![]() |
11 ஜனவரி 1960 | 12 மார்ச் 1962 | இதேகா | இராயலசீமை | கர்னூல் | 790 நாட்கள் | |
- | நீலம் சஞ்சீவ ரெட்டி | ![]() |
12 மார்ச் 1962 | 20 பெப்ரவரி 1964 | இதேகா | இராயலசீமை | அனந்தபூர் | 719 நாட்கள் | |
3 | காசு பிரம்மானந்த ரெட்டி | ![]() |
21 பெப்ரவரி 1964 | 30 செப்டம்பர் 1971 | இதேகா | கடற்கரை ஆந்திரா | குண்டூர் | 2777 நாட்கள் | |
4 | பி. வி. நரசிம்ம ராவ் | 30 செப்டம்பர் 1971 | 10 சனவரி 1973 | இதேகா | தெலுங்கானா | கரீம்நகர் | 468 நாட்கள் | ||
குடியரசுத் தலைவர் ஆட்சி (11 சனவரி 1973 – 10 திசம்பர் 1973. காலம்: 335 நாட்கள்)[1] | |||||||||
5 | ஜலகம் வெங்கல ராவ் | 10 திசம்பர் 1973 | 6 மார்ச் 1978 | இதேகா | ஆந்திரா/தெலுங்கானா | கிழக்கு கோதாவரி/கம்மம்[2] | 1547 நாட்கள் | ||
6 | மாரி சன்னா ரெட்டி | 6 மார்ச் 1978 | 11 அக்டோபர் 1980 | இதேகா | தெலுங்கானா | ரங்காரெட்டி மாவட்டம் | 950 நாட்கள் | ||
7 | தங்குதுரி அஞ்சய்யா [3] | ![]() |
11 அக்டோபர் 1980 | 24 பெப்ரவரி 1982 | இதேகா | தெலுங்கானா | மேதக் | 501 நாட்கள் | |
8 | பவனம் வெங்கடராமி ரெட்டி | 24 பெப்ரவரி 1982 | 20 செப்டம்பர் 1982 | இதேகா | கடற்கரை ஆந்திரா | குண்டூர் | 208 நாட்கள் | ||
9 | கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | 20 செப்டம்பர் 1982 | 9 சனவரி 1983 | இதேகா | இராயலசீமை | கர்னூல் | 111 நாட்கள் | ||
10 | என். டி. ராமராவ் | ![]() |
9 சனவரி 1983 | 16 ஆகத்து 1984 | தெலுங்கு தேசம் | கடற்கரை ஆந்திரா | கிருஷ்ணா | 585 நாட்கள் | |
11 | ந. பாஸ்கர ராவ் | 16 ஆகத்து 1984 | 16 செப்டம்பர் 1984 | தெலுங்கு தேசம் (தனிப்பிளவு) | கடற்கரை ஆந்திரா | குண்டூர் | 31 நாட்கள் | ||
- | என். டி. ராமராவ் | ![]() |
16 செப்டம்பர் 1984 | 2 திசம்பர் 1989 | தெலுங்கு தேசம் | கடற்கரை ஆந்திரா | கிருஷ்ணா | 1903 நாட்கள் | |
- | மாரி சன்னா ரெட்டி | 3 திசம்பர் 1989 | 17 திசம்பர் 1990 | இதேகா | தெலுங்கானா | ரங்காரெட்டி மாவட்டம் | 379 நாட்கள் | ||
12 | நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி | 17 திசம்பர் 1990 | 9 அக்டோபர் 1992 | இதேகா | கடற்கரை ஆந்திரா | நெல்லூர் | 662 நாட்கள் | ||
- | கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | 9 அக்டோபர் 1992 | 12 திசம்பர் 1994 | இதேகா | இராயலசீமை | கர்னூல் | 794 நாட்கள் | ||
- | என். டி. ராமராவ் | ![]() |
12 திசம்பர் 1994 | 1 செப்டம்பர் 1995 | தெலுங்கு தேசம் | கடற்கரை ஆந்திரா | கிருஷ்ணா | 263 நாட்கள் | |
13 | சந்திரபாபு நாயுடு[4] | ![]() |
1 செப்டம்பர் 1995 | 14 மே 2004 | தெலுங்கு தேசம் | இராயலசீமை | சித்தூர் | 3378 நாட்கள் | |
14 | ராஜசேகர ரெட்டி | ![]() |
14 மே 2004 | 2 செப்டம்பர் 2009 [5] | இதேகா | இராயலசீமை | கடப்பா | 1938 நாட்கள் | |
15 | கொனியேட்டி ரோசையா | ![]() |
03 செப்டம்பர் 2009[6] | 24 நவம்பர் 2010 | இதேகா | கடற்கரை ஆந்திரா | குண்டூர் | 448 நாட்கள் | |
16 | நல்லாரி கிரண் குமார் ரெட்டி | 25 நவம்பர் 2010 [7] | மார்ச் 1, 2014 | இதேகா | இராயலசீமை | சித்தூர் | 1193 நாட்கள் | ||
16 | குடியரசுத் தலைவர் ஆட்சி | மார்ச் 1, 2014 | சூன் 8 2014 | - | - | - | 98 நாட்கள் | ||
ஆந்திரப்பிரதேசத்திலிருந்து, தெலுங்கானா பகுதி சூன் 2, 2014 அன்று அதிகாரபூர்வமாக தனி மாநிலமாக பிரிந்ததை அடுத்து இராயலசீமை, கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டும் புதிய ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகளாக மாறின. இம்மாநிலம் சீமாந்திரா என்றும் குறிக்கப்படுகிறது.
# | பெயர் | படம் | தொடக்கம் | முடிவு | கட்சி | சொந்தபகுதி | பிறந்த இடம் |
பதவியில் இருந்த நாட்கள் |
1 | சந்திரபாபு நாயுடு | ![]() |
சூன் 8 2014 | 29 மே 2019 | தெலுங்கு தேசம் | இராயலசீமை | சித்தூர் | 1816 நாட்கள் |
2 | ஜெகன் மோகன் ரெட்டி | ![]() |
30 மே 2019 | தற்போது கடமையாற்றுகிறார் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் | 2241 நாட்கள் |
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads