ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல்
Remove ads

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல் (List of cities in Andhra Pradesh) என்ற இக்கட்டுரையில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள நகரங்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கு ஆணையரின் அலுவலகம் நடத்திய 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Thumb

நகரப் புள்ளி விவரங்கள்

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,00,000 மற்றும் அதற்கு மேலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் நகரங்கள் என அழைக்கப்படுகின்றன [1]. மாநிலத் தலைநகரான அமராவதி உட்பட மொத்தம் 31 நகரங்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ளன [2]. இந்நகரங்களில் 14 மாநகராட்சிகள், 16 நகராட்சிகள் உள்ளடங்கியுள்ளன [3]. மாநிலத்தின் பதின்மூன்று மாவட்ட தலைநகரங்களும் நகரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவையாவும் மாநகராட்சி தரநிலையில் உள்ளவையாகும். , சுற்றியுள்ள கிராமங்களையும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இணைத்த பிறகான கணக்கெடுப்பின்படி விசாகப்பட்டினத்தின் மக்கள் தொகை 20,35,922 பேர் ஆகும். இம்மாநிலத்தில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமாக விசாகப்பட்டினம் கருதப்படுகிறது. 1,25,939 பேரை மக்கள்தொகையாகக் கொண்ட சிறீகாகுளம், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியாகவும் கருதப்படுகிறது [3] விசாகப்பட்டினம் மற்றும் அமராவதி ஆகிய இரண்டு நகரங்களும் மக்கள் தொகை மிகுந்த பெரு நகரங்களாகக் கருதப்படுகின்றன.[4]. பரப்பளவின் அடிப்படையில் கணக்கிட்டால் விசாகப்பட்டினம் 681.96 கி.மீ 2 பரப்பளவைக் கொண்டு மிகப்பெரிய மாநகராட்சியாகத் திகழ்கிறது. இதற்கு அடுத்ததாக மாநிலத்தின் தலைநகரம் அமராவதி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. 7.12 கி.மீ 2 பரப்பளவைக் கொண்ட புரோத்தாதூர் நகரம் மிகச்சிறிய நகராட்சியாகும்.ஆந்திரப் பிரதேசத்தில் மக்களடர்த்தி குறைந்த நகரமாக விசாகப்பட்டினமும், மக்களடர்த்தி மிகுந்த நகரமாக ஏலூரு நகரமும் கருதப்படுகின்றன. மாநகராட்சிகளில் 14.55 கி.மீ 2 பரப்பளவைக் கொண்ட ஏலூரு நகரம் சிறிய மாநகராட்சியாகக் கருதப்படுகிறது [3].

Remove ads

நகரங்களின் பட்டியல்

குறிப்பு

மச்சிலிப்பட்டினம், விசயநகரம் முதலியன மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டு நகராட்சியாகவே உள்ளன [5][6].

மேலதிகத் தகவல்கள் வ.எண்., பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads