அனம் விவேகானந்த ரெட்டி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அனம் விவேகானந்த ரெட்டி (Anam Vivekananda Reddy) அனம் விவேகா என்றும் அழைக்கப்படும் இவர், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். பின்னர், 2016 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.

விரைவான உண்மைகள் அனம் விவேகானந்த ரெட்டி, ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இவர், அனம் வெங்கட ரெட்டி என்பவருக்கு மகனாக நெல்லூரில் பிறந்தார். இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் ஆந்திர பிரதேசத்தின் அரசியல் தலைவரான மறைந்த அனம் செஞ்சு சுப்பா ரெட்டியின் மருமகன் ஆவார். அனம் ராமநாராயண ரெட்டி எ. சா. ராஜசேகர் மற்றும் கொனியேட்டி ரோசையா ஆகியோரின் அமைச்சரவையில் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சராகவும், கிரண் குமார் ரெட்டியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்த அனம் ராமநாராயண ரெட்டியின் சகோதரர் ஆவார். விவேகா நெல்லை விஆர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

Remove ads

தொழில்

விவேகானந்த ரெட்டி ஆந்திர சட்டசபைக்கு மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை மாவட்ட நில அடமான வங்கியின் தலைவராகவும் (1982), நெல்லூர் நகராட்சியின் துணைத் தலைவராகவும் (1982), நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இறப்பு

அனம் விவேகானந்த ரெட்டி நீண்ட நாள் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் 25 ஏப்ரல் 2018 அன்று காலமானார். [1] [2] [3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads