அனம் ராமநாராயண ரெட்டி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனம் ராமநாராயண ரெட்டி (Anam Ramanarayana Reddy) (பிறப்பு 10 ஜூலை 1952) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 2012 இல், நல்லாரி கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம் பெற்று, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக இருந்தார். 2018 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர், 2023 மார்ச் 24 அன்று கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் [1]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
ராமநாராயண ரெட்டி நெல்லூரில் வேங்கட ரெட்டி என்பவருக்கு பிறந்தார். இவர் ஒரு அரசியல்வாதியான அனம் விவேகானந்த ரெட்டியின் சகோதரர் ஆவார். தனது இடைநிலைக்கல்விக்குப் பிறகு ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலைச் சட்டம் ஆகியப் பட்டங்களைப் பெற்றார்.
தொழில்
ரெட்டி சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டத்திலுள்ள ராப்பூர் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். என். டி. ராமராவ் அமைச்சரவையில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
இவர் 1991 இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். தொகுதி மறுநிர்ணயம் நடைமுறைக்கு வந்ததன் விளைவாக, 2009 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக இவர் ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதிக்கு மாறி அங்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007 மற்றும் 2009 க்கு இடையில், எ. சா. ராஜசேகர் தலைமியிலான அரசாங்கத்தில் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கான மாநில அமைச்சராக ரெட்டி இருந்தார். [2] ஜூலை 2009 இல் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். [3] [4]
2012 ஆம் ஆண்டு, கிரண் குமார் ரெட்டியின் அரசில் நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சராவும்.[5] பின்னர் 2016 இல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். [6]
2018ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் இணைந்தார். 2023ல் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads