அன்னம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அன்னம் (ⓘ) (Swan) என்பது "அனாடிடே" குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றில் 6-7 வகையானவை உண்டு. அவை "அனாசெரினே" எனும் துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. எனினும் அவை வழமையான அன்னங்களிலிருந்து வேறுபட்டவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதன் மூலம் இனம்பெருக்குகின்றன. இவை 3 தொடக்கம் 8 வரை முட்டையிடுகின்றன. இவை தனது குறித்த ஜோடியுடனேயே வாழ்க்கை நடத்தும். சில வேளைகளில் ஜோடிகள் பிரிவதும் உண்டு.

இவை பொதுவாக குளிரான நாடுகளிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன. இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும். இலங்கை இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் இவை அருகியிருப்பினும் ஏனைய சில ரோப்பிய நாடுகளில் இன்னும் வாழ்கின்றன.

அன்னப் பட்சி இற்கு இந்தியப் பழங்கதைகளில் கற்பனையான, அபூர்வமான இயல்புகள் பல ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற பண்பு இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று.[4] இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
Remove ads
இலக்கியங்களில் அன்னம்
சங்க இலக்கியச் சான்றுகளின்படி நோக்கினால் அன்னம் நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த ஒரு பறவை.[5]
உருவம்
வாழ்விடம்
- அன்னம் பொதியமலையில் வாழ்ந்ததாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.[10]
- தாழைமரத்தில் அமர்ந்திருக்கும் [11]
- செந்நெல் வயலில் துஞ்சும் [12]
- குளம் குட்டைகளில் மேயும் நிலம் தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த விலங்கு [13]
- கடற்கரை மணல்மேடுகளில் தங்கும் [14]
- ஆற்றுப்புனலில் துணையோடு திரியும் [15]
- உப்பங்கழிகளில் மேயும் [16]
செயல்
அழகு
அன்னத்தின் தூவி
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads