அபிராமம்
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபிராமம் (ஆங்கிலம்:Abiramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். பரமக்குடி - கமுதி சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில் (ரங்கூன்) தொழில் செய்து வந்தனர். இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 3.83 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.47°N 78.45°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41 மீட்டர் (134 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads