அபிராம் தெபோரின்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அப்ராம் மோயிசெயேவிச் தெபோரின் (Abram Moiseyevich Deborin, உருசியம்: Абра́м Моисе́евич Дебо́рин Ио́ффе; சூன் 16 [யூ.நா. சூன் 4] 1881 – மார்ச் 8, 1963) சோவியத் மார்க்சியவாதியும், மெய்யியலாளரும், சோவியத் அறிவியல் கல்விக்கழகக் கல்வியியலாளரும் (1929) ஆவார்.

விரைவான உண்மைகள் அபிராம் தெபோரின், பிறப்பு ...

புரட்சி இயக்கத்தில் 1890களின் இறுதியில் சேர்ந்து, 1903இல் உருசிய சமூக-சனநாயகத் தொழிலாளர் கட்சியின் போல்செவிக் பிரிவில் சேர்ந்தார். 1907இல் மீண்டும் மென்செவிக் பிரிவுக்கு மாறினார். அங்கு அரசியலிலும் மெய்யியலிலும் ஜார்ஜி பிளிக்கானோவின் மாணாக்கரானார். தெபோரின் பெர்ன் பல்கலைக்கழக மெய்யியல் துறையில் தன் பட்டத்தை 1908இல் பெற்றார். இவர் விரைவில் மார்க்சீய மெய்யியல் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதலானார்.

1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தெபோரின் மென்சவிக்குகளிடம் இருந்து விலகி, சுவெர்துலோவ் பல்கலைக்கழகத்திலும் செம்பேராசிரியர்கள் கல்விக் கழகத்திலும், மெய்யியல் கல்விக் கழகத்திலும் விரிவுரை ஆற்றலானார். மேலும் உடனே "Under the Banner of Marxism," இதழின் பதிப்புப் பணிகளையும் மேற்கொள்ளலானார். இவர் 1926-1931 கால இடைவெளியில் அவ்விதழின் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றினார்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads