அமஸ்ய மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமஸ்யா மாகாணம் (Amasya Province, துருக்கியம்: Amasya ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இது நாட்டின் வடக்கே கருங்கடல் பிராந்தியத்தில் யேசில் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் மாகாணத் தலைநகரம் அமஸ்யா நகராகும். பேரரசர் அலெக்சாந்தர் காலத்திய ஆவணங்களில் பழங்கால அமேசியா குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புவியியலாளரும், வரலாற்றாசிரியருமான இசுட்ராபோவின் பிறப்பிடமும் இது ஆகும். உதுமானியப் பேர்ரசு காலத்தில், அமஸ்யா அதன் மதராசாக்களுக்காக நன்கு அறியப்பட்டிருந்தது.
Remove ads
நிலவியல்
கருங்கடலுக்கும் உள் அனதோலியாவிற்கும் இடையில் உள்ள அமஸ்யா, யெசிலர்மக், செகெரெக், டெர்சகன் போன்ற ஆறுகள் பாயும் வளமான சமவெளிகளின் மையத்தில் அமைந்துள்ளது. கருங்கடலுக்கு அருகில் இருந்தபோதிலும் அமாஸ்யாவில் வெப்பமான கோடை மற்றும் மிதமான குளிர்காலம் உள்ளது. அமஸ்யா வேளாண்மையை முதன்மையாக கொண்ட மாகாணமாகும், இது நாட்டில் நன்கு ஆப்பிள் விளையும் மாகாணம். மேலும் புகையிலை, பீச், செர்ரி, ஓக்ரா ஆகியவற்றை விளைகிறது. [2]
Remove ads
மாவட்டங்கள்
அமஸ்யா மாகாணம் ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (மாவட்டத் தலைநகர் தடிமனாக குறிப்பிடபடுள்ளது):
- அமஸ்யா
- கெய்னசெக்
- ஜிமியாக்கரி
- ஹமாமா
- மெர்சிஃபோன்
- சுலுவா
- டகோவா
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads