அமிருதசரசு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெருநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமிருதசரசு (Punjabi: ਅੰਮ੍ਰਿਤਸਰபஞ்சாபி உச்சரிப்பு: [əmːˈɾɪtsəɾ] (ⓘ), Amritsar, அம்ரித்ஃசர்), அமிருதசரசு இந்தியாவின் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள அமிருதசரசு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். வரலாற்றின்படி இராம்தாசபூர் என்றும் பேச்சு வழக்கில் அம்பர்சர் என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பஞ்சாப் மாநிலத்தின் மஜ்ஹா பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் உள்ளது. இந்நகரம் சண்டிகர் தலைநகருக்கு 217 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ளது.இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 31.63°N 74.87°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது.
தட்பவெப்ப நிலை
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 975,695 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[12] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். அம்ரித்சர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அமிருதசரசின் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads