அமிர்தம் (திரைப்படம்)

வேதம் புதிது கண்ணன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமிர்தம் (Amirtham) என்பது 2006 ஆம் ஆண்டுய தமிழ் நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை வேதம் புதிது கண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் கணேஷ் மற்றும் நவ்யா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கிரீஷ் கர்னாட், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, ராஜீவ், ரேகா, யுகேந்திரன், மதுரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பவதாரிணி இசை அமைத்துள்ளார். படமானது 2006 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் அமிர்தம், இயக்கம் ...
Remove ads

கதை

முக்கூடல் என்ற கிராமத்தில், பக்தியுள்ள பிராமணரான ராமசாமி ஐயங்கார் ( கிரீஷ் கர்னாட் ) ஒரு வருமானமற்ற கோயில் அர்ச்சகர். அவரது மனைவி ருக்குமணி (அனுராதா கிருஷ்ணமூர்த்தி) மற்றும் அவரது மகள் அமிர்தா ( நவ்யா நாயர் ) ஆகியோருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ராமசாமி ஐயங்கரை அவரது நற்பண்புக்காக கிராம மக்கள் பெரிதும் மதிக்கிறார்கள். அதே கோவிலைச் சேர்ந்தவரான, பசுபதி பிள்ளை ( ராஜீவ் ) ஒரு நாதஸ்வர வித்துவானும் பணக்காரரும் ஆவார். அவருக்கு ராமசாமி ஐயங்கருடன் நல்ல உறவு உள்ளது. அவருக்கு ஒரு மனைவி ( ரேகா ), ஒரு மகன் நகரத்தில் படிக்கிறான். பசுபதி பிள்ளையின் மகன் அமிர்தம் (கணேஷ்) பொறியியல் பட்டம் முடித்து கிராமத்திற்குத் திரும்புகிறான். அமிர்தம் ஒரு நாத்திகரும், பகுத்தறிவாளரும் ஆவான். ஐயங்காரின் மகளான அமிர்தா அமிர்தத்தை தன் காதலைச் சொல்லாமல் அவனைக் காதலிக்கிறாள். அமிர்தத்தின் ஒன்றுவிட்ட சகோதரி சொர்ணா (மதுரா) அவளது கொடுமைக்கார கணவர் வீரையனால் ( யுகேந்திரன் ) கொல்லப்படுகிறாள்.

ருக்குமணி தனது மகள் அமிர்தத்தை காதலிப்பதை அறிந்துகொள்கிறாள். அவள் மகளின் காதல் விவகாரத்துக்கு ஆதரவாக இருக்கிறாள். ருக்குமணி அமிர்தத்தின் தாயிடம் தன் மகளின் காதலுக்கு ஆதரவாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறாள். அமிர்தா தனது உணர்வுகளை அமிர்தத்திடம் சொல்லும்போது, அவன் அவளது ஆசையை நிராகரிக்கிறான். ஏனெனில் இதனால் தனது தந்தைக்கும் அளது தந்தைக்கும் இடையிலான நட்பு பாதிக்கும் நிலைக்கு வருவதை விரும்பவில்லை. பின்னர் அமிர்தம் கிராமத்திலிருந்து நகரத்திற்குத் திரும்புகிறான்.

இதற்கிடையில், பெட்ரோலிய புவியியலாளர்கள் கோயில் உள்ள பகுதிக்கு அடியில் பெட்ரோல் வளம் இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இதனால் அரசாங்கத்தினர் எண்ணெய் துரப்பணம் மற்றும் பெட்ரோலிய பிரித்தெடுக்கும் பணியை செய்ய வசதியாக கிராம மக்களை கிராமத்தை விட்டு வேளியேறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கிராம மக்கள் எதிர்க்கின்றனர். அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக உள்ள ராமசாமி ஐயங்கரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். கோயில் இடிக்கப்படுவதை எதிர்த்து போராட அமிர்தம் கிராமத்திற்கு திரும்பி வருகிறான். கிராம மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையிலான மோதலில், அமிர்தம் சுட்டுக் கொல்லப்படுகிறான். உச்சநீதிமன்றம் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்துகிறது. என்றாலும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகிறது. பசுபதி பிள்ளை மற்றும் அவரது மனைவி துயரத்தோடு தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கத் தக்கவாறு அமிர்தா அவர்களுடன் செல்ல முடிவு செய்கிறார், இதனால் அவர்களுக்கு மகளாக அவள் மாறுகிறாள்.

Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

வேதம் புதிது (1987) படத்தின் மூலமாக எழுத்தாளராக திரையுலகில் நுழைந்த வேதம் புதிது கண்ணன், இந்த படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். பகுத்தறிவுவாதத்திற்கும் தத்துவத்திற்கும் இடையில் எப்போதும் நிலவும் பிளவுகளை இந்த படம் கையாண்டுள்ளது. அழகிய தீயே (2004) படக் கதாநாயகி நவ்யா நாயர், கணேசின் ஜோடியாக ஐயங்கார் வீட்டுப் பெண்ணாக நடிக்க ஒப்பந்தமிட்டார். கிரீஷ் கர்னாட் (குரல் மோகன் ராமன் ) கோயில் பூசாரி வேடத்தில் நடித்தார் மேலும் கர்நாடக இசைக்கலைஞர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி பெரிய திரையில் அறிமுகமானார்.[1][3][4]

இசைப்பதிவு

படதிற்கான இசையை இசையமைப்பாளர் பவதாரிணி அமைத்தார். 2006 இல் வெளியான இப்படதின் பாடல் தொகுப்பில், நான்கு பாடல்கள் இருந்தன. பாடல்களை பிறசூடன், பா. விஜய், யுகபாரதி, கிருத்தியா ஆகியோர் எழுதியுள்ளனர்.[5]

மேலதிகத் தகவல்கள் ட்ராக், பாடல் ...
Remove ads

வரவேற்பு

Bbthots.com இன் பாலாஜி பாலசுப்பிரமணியம், "இப்படம் சில தீவிரமான சிக்கல்களை வேறு அமைப்பில் கொண்டுவந்து காட்டுகிறது, ஆனால் சிக்கல்களை சுவாரஸ்யமான முறையில் காட்டத் தவறிவிட்டது" என்றார்.[6] Nowrunning.com இன் பி. வி. சதீஷ்குமார் இந்த படத்துக்கு 5-ல் 3 என மதிப்பெண்ணிட்டு எழுதினார், "இதில் நடிகர்களாக இருந்தாலும் அல்லது கதைக்களமாக இருந்தாலும் அல்லது கதைப்போக்கு எல்லாவற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பின் இந்த அனைத்து கூறுகளிலும் கண்ணன் தனது திறமையைக் காட்டியுள்ளார். ஒரு உண்மையான முயற்சியை மேற்கொண்டதற்காக அவரைப் பாராட்டப்பட வேண்டும் ".[7] தி இந்துவின் விமர்சகர் ஒருவர், "கண்ணன் டூயட் மற்றும் கனவு பாடல்கள் மூலம் வணிக கூறுகளை இப்படத்தில் கொண்டு வருகிறார். 'வேதம் புதிது' மற்றும் இப்போதய 'அமிர்தம்' ஆகியவற்றில் அவரது ஆழ்ந்த, சிந்தனையைத் தூண்டும் உரையாடல் நீண்ட காலமாக மறக்க முடியாததாகவே இருக்கும். ஒரு உரையாடல் எழுத்தாளராக கண்ணன் பிரகாசிக்கிறார். ஆனால் அவரது கதை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது ".[8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads