யுகேந்திரன்
தமிழ்த் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுகேந்திரன் (Yugendran) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், நடிகருமாவார். இதுவரை 600-இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.[1].[2] மேலும் சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
Remove ads
வாழ்க்கை
யுகேந்திரன் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். இவருடைய அக்கா பிரசாந்தினி தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாக உள்ளார். யுகேந்திரன் 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுவர்ண ஒலி என்ற இலங்கை வானொலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத் துணையான ஹேம மாலினியைப் பார்த்தார். இவருடைய மனைவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர். வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இசைப்பயணம்
யுகேந்திரன் சிறு வயதிலேயே இசை கற்ற சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். [[உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதற் பாடலான ”செந்தூரப் பூவே” என்ற பாடலில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.
திரைப்பயணம்
யுகேந்திரன் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிகத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா”, “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
Remove ads
நடிகராக
பாடகராக
பாடலின் பெயர் | இசைக்கோவை | இணைப் பாடகர்கள் | இசை |
ஏ சம்பா ஏ சம்பா | பாண்டவர் பூமி | சுபா, மஹாராஜன் | பரத்வாஜ் |
ஆடி ஆடி வாம்மா | இந்திரன் | சிறீவர்தினி | மணி சர்மா |
அடிடா | கோவா | சரண் | யுவன் சங்கர் ராஜா |
ஆட்டோகிராப் | ஐ லவ் யூ டா | ஷாலினி | பரத்வாஜ் |
கரோலினா | காதல் சடுகுடு | கார்த்திக் | தேவா |
செர்ரி செர்ரி | லவ் சேனல் | அனுராதா சிறீராம் | தேவா |
என்ன பார்க்கிறாய் | தவமாய் தவமிருந்து | சுசித்ரா | சபேஷ் முரளி |
கல்யாணம்தான் கட்டிகிட்டு | சாமி | கே கே, சிறீலேகா பார்த்தசாரதி | ஹாரிஸ் ஜெயராஜ் |
கிழக்கே பார்த்தேன் | ஆட்டோகிராப் | பரத்வாஜ் | |
கோடைமலை மேல வச்சு | கண்ணன் வருவான் | சரண், சித்ரா | சிற்பி |
கோழி வந்ததா | ஆஹா | அனுராதா சிறீராம், மலேசியா வாசுதேவன், சுஜாதா மோஹன் | தேவன் |
மெக்கி மெக்கி | காதல் திருடா | அனுராதா சிறீராம் | பரணி |
முல்லைப் பூ | காதல் சாம்ராஜ்ஜியம் | சரண், வெங்கட் பிரபு | யுவன் சங்கர் ராஜா |
முதல் முதலாய் | லேசா லேசா | மதுமிதா, திப்பு | ஹாரிஸ் ஜெயராஜ் |
நெஞ்சத்தைக் கிள்ளாதே | நெஞ்சத்தைக் கிள்ளாதே | பிரஷாந்தினி | பிரேம்ஜி அமரன் |
ஒ ஷல்லல்லா ஜமாய் | ஜூனியர் சீனியர் | பிரேம், யுவன் சங்கர் ராஜா | யுவன் சங்கர் ராஜா |
ஓ.. மரியா | காதலர் தினம் | தேவன், பெபி மணி | ஏ. ஆர். ரகுமான் |
ஒரு மாதிரி | கீ மோ | பிரசாந்தினி | இளங்கோ கலைவாணன் |
பார்த்தேன் பார்த்தேன் | பார்த்தேன் ரசித்தேன் | ரேஷ்மி | பரத்வாஜ் |
பார்த்தே பார்த்தே | ரிலாக்ஸ் | குழுவினர் | தேவா |
பிகாசோ ஓவியம் | ராயல் பேமிலி | பிரசாத் | பரணி |
பொட்டல்ல காதிலே | காதல் ஜாதி | யுவன் சங்கர் ராஜா | இளையராஜா |
ரோசாப்பூ உதட்டுல | தமிழ் | அனுராதா சிறீராம் | பரத்வாஜ் |
சுடும்வரை நெருப்பு | ஜனனம் | பாலாஜி, கார்த்திக், டிம்மி, திப்பு | பரத்வாஜ் |
சுத்துதே சுத்துதே | நேபாளி | விஜய் | சிறீகாந்து தேவா |
பொள்லாச்சி சந்தையிலே | ரோஜாவனம் | பரத்வாஜ் | |
விளக்குவொன்னு திரிய பார்க்குது | தேவதையைக் கண்டேன் | மாலதி | தேவா |
Remove ads
இசை இயக்குநராக
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads