அமெரிக்கக் காட்டெருது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெரிக்கக் காட்டெருது அல்லது அமெரிக்க பைசன் (American bison) எனப்படுவது 19ம் நூற்றாண்டுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் பெருந்தொகையில் காணப்பட்ட காட்டெருது இன விலங்கு ஆகும். அமெரிக்க முதற்குடி குழுக்கள் பலவற்றின் உணவு, பொருளாதார, ஆன்மீக மூலதாரமாக அமைந்த இந்த விலங்குகள் ஐரோப்பியரின் வருகையின் பின்பு அவர்களால் பெருந்தொகையில் வணிகத்துக்காக வேட்டையாடப்பட்டு இன அழிவின் நிலைக்குத் தள்ளப்பட்டன. அண்மைக் காலத்தில் இவை சில தேசியப் பூங்காக்ககளில் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டு வருகின்றன. இன்று ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய விலங்கு இதுவே ஆகும்.
#WPWP
Remove ads
வாழிடம்
அமெரிக்கக் காட்டெருதுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பிரெய்ரிப் புல்வெளி, மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மேலும் செங்குத்தாக அமையாத மலைப்பாங்கான பகுதிகளிலும் வாழ்கின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads