அமோனியம் தயோசல்பேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமோனியம் தயோசல்பேட்டு (Ammonium thiosulfate) என்பது H8N2O3S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியா நெடியுடன் வெண்மை நிற படிகத் திண்மமாக இது காணப்படுகிறது. அமோனியம் தயோசல்பேட்டு தண்ணீரில் உடனடியாகவும் அசிட்டோனில் மெதுவாகவும் கரைகிறது. எத்தனால் மற்றும் டை எத்தில் ஈதர் முதலிய கரிம கரைப்பான்களில் இச்சேர்மம் கரைவதில்லை[1]
Remove ads
பயன்கள்
ஒளிப்படம் நிலைநிறுத்துதல்
புகைப்படத் தொழிலில் அமோனியம் தயோசல்பேட்டு ஒரு புகைப்பட நிலைநிறுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது[2]. சோடியம் தயோசல்பேட்டை விட வேகமாக செயல்படுவதால் இச்சேர்மம் ஒரு விரைவு நிலைநிறுத்தியாகக் கருதப்படுகிறது. புகைப்பட நிலைநிறுத்தும் செயல்முறையில் பின்வரும் வேதி வினைகள் அடங்கியுள்ளன. [3]
- AgBr + 2 (NH4)2S2O3 → (NH4)3[Ag(S2O3)2] + NH4Br
- AgBr + 3 (NH4)2S2O3 → (NH4)5[Ag(S2O3)3] + NH4Br
உலோகப் பிரிப்பியல்
தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து கரைத்துக் கழுவி பிரித்தெடுப்பதற்கும் பயனாகிறது. இங்கு இச்சேர்மம் செப்பு முன்னிலையில் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது. தங்கம் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் சயனைடு சேர்ப்பு செயல்முறைக்கு மாற்றாக நச்சுத்தன்மையற்ற இக்கரைத்துக் கழுவல் செயல்முறை கருதப்படுகிறது[4].
பிற பயன்கள்
அமோனியம் தயோசல்பேட்டை ஒர் உரமாகவும்[5] பயன்படுத்த முடியும். நிலக்கரி கழிவு கலவைகளுடன் சேர்க்கப்படும் சேர்க்கைப் பொருளாகவும் இதை பயன்படுத்த முடியும் என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அமோனியம் தயோசல்பேட்டு சேர்க்கப்படுவதால், ஆபத்தான் டையாக்சின்களும் பியூரான்களும் உருவாதல் தடுக்கப்படுகிறது[6].
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads