அம்பத்தூர் தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் இரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அம்பத்தூர் ரயில் நிலையம், (ஆங்கிலம்: Ambattur Railway station) சென்னை புறநகர் ரயில்வேயின், சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் பிரிவின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று. அம்பத்தூர் தொடருந்து நிலையமானது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்திற்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சென்னையின் புறநகர்ப் பகுதியான அம்பத்தூருக்கும் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளான விஜயலட்சுமிபுரம் கிருஷ்ணாபுரம், கருக்கு, ஒரகடம், புதூர், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு ஆகிய பகுதி மக்களுக்கும், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணி செய்யும் பணியாளர்களுக்கும் தொடருந்து சேவை அளிக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 19.18 மீட்டர் உயரத்தில் அம்பத்தூரிலுள்ள வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் அம்பத்தூர், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

Thumb
பெயர் பலகையுடன் கூடிய நடை மேடை எண் 1 (நிலையத்தின் மேற்குப்புறம்)

இந்நிலையத்தில் 21 ஜனவரி 1946 அன்று மாலை 4.15 மணிக்கு மகாத்மா காந்தி காமராஜாரால் வரவேற்கப்பட்டார. பிறகு நிலையத்தை பார்வையிட்டனர்.

இந்நிலையத்தின் முதல் இருப்புப்பாதை, 1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் பிரிவில் மின்சாரமயமாக்கப்பட்டது. நிலையத்தில் கூடுதல் இருப்புப்பாதை அக்டோபர் 2, 1986 அன்று, வில்லிவக்கம்-திருநின்றவூர் பிரிவின் மின்மயமாக்கலுடன் மின்மயமாக்கப்பட்டன.

Remove ads

தளவமைப்பு

Thumb
விரைவு ரயில்களுக்கான இருப்புப்பாதை வலது புறத்தில் (மேற்கு நோக்கி எடுக்க பட்ட புகைப்படம்)
Thumb
நிலையத்தின் புறநகர் ரயில்களுக்கான இருப்புப்பாதை (மேற்கு நோக்கி எடுக்க பட்ட புகைப்படம்)

அம்பத்தூர் தொடருந்து நிலையத்தில் மொத்தமாக 8 இருப்புப்பாதைகளும் அதில் 4 துணை இருப்புப்பாதையாக செயல்படுகிறது. நிலையத்தின் 1 மற்றும் 2 வது நடைமேடை புறநகர் ரயில்களுக்காக மட்டுமே உபயோகப்படுகிறது. 3 வது நடைமேடை உள்ளுர் துரித வண்டிகளுக்கும், விரைவு வண்டிகளுக்கும் உபயோகப்படுகிறது. முதல் நடைமேடை ஒரு பக்க மேடை side platform மற்றும் நிலையத்தின் நுழைவாயில் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் இடத்தைக் கொண்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடை, island platform தீவு தள நடைமேடையாக உள்ளது. நடைமேடைகள் நடைமேம்பாலம், footbridge மூலம் இணைக்கப்பட்டுள்ளன. லெவல் கிராசிங்கில் கட்டப்பட்ட இரண்டாவது நடை மேம்பாலம் அக்கம்பக்கத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களை இணைக்கிறது. 2001 ஆம் ஆண்டில், தெற்கு ரயில்வே {{INR},400,000 செலவில் லெவல் கிராசிங்கில் நடைபாதையை மேம்பாலம் புதுப்பித்தது. [2]

இந்த நிலையத்தில் புறநகர் தொடருந்துகளுக்கான மூன்று நடைமேடைகள் உள்ளன.சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையேயான மேற்குத் தடம் தொடருந்துப் பாதையில் (West line) சராசரியாக 280 நடை பயணங்கள் நிகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொடருந்து நிலையத்தில் அதிகமாக புறநகர் வண்டிகளுக்கான பயணச்சீட்டுகள் விற்பனையாகிறது. ஒவ்வொரு நாளும் 70,000 க்கும் அதிகமான பயணிகளை கையாளுகிறது அம்பத்தூர் தொடருந்து நிலையம்.

Remove ads

வசதிகள்

அம்பத்தூர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.

வளர்ச்சி

இந்நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீண்ட தொலைவு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு மையம் திறக்கப்பட்டது மேலும் நடைமேடை விரிவாக்கத்திற்கும் [3] ஒரு சில விரைவு வண்டிகள் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, அம்பத்தூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 21.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads