கள்ளிக்குப்பம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கள்ளிக்குப்பம் ("Kallikuppam") என்பது இந்தியாவில் சென்னை அம்பத்தூரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக செங்குன்றம் - அம்பத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் இருந்து உருவாகியுள்ளது. அக்டோபர் 2011 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சியாக இருந்த அம்பத்தூரின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பின்னர் அரசு ஆணைபடி 2011இல் அம்பத்தூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் [1] தற்போது கள்ளிக்குப்பம், சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை மாநகராட்சியின் 7வது மண்டலமான அம்பத்தூரில் வார்டு எண் 82-இன் ஒரு பகுதியாக மாறிவிட்டது. கள்ளிக்குப்பம் அம்பத்தூர் சட்ட மன்றத் தொகுதியிலும், ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் அடங்கும். வில்லிவாக்கம், பாடி, ஆவடி, புழல், செங்குன்றம் 5 கி.மீ அருகில் உள்ளது.

விரைவான உண்மைகள் கள்ளிக்குப்பம், நாடு ...
Remove ads

போக்குவரத்து வசதிகள்

கள்ளிக்குப்பம் வழியாக பூவிருந்தவல்லி , தாம்பரம் மற்றும் ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. சென்னை மாநகருக்கு செல்லும் பேருந்துகள், தடம் எண் 248A, 248P, வள்ளலார் நகர், 77M, 77D கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. தற்பொழுது கூடுதலாக S43,S67 என்ற சிற்றுந்து புதூரிலிருந்து கள்ளிக்குப்பம் வழியாக வில்லிவாக்கம் வரை இயக்கப்படுகிறது. ஷேர் ஆட்டோக்கள் பொதுமக்கள் போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது காலை 4 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை இயங்குகிறது. அம்பத்தூர் ரயில் நிலையம் 5 கி.மி மற்றும் பட்டரவாக்கம் ரயில் நிலையம் 3.5 கி.மி. கள்ளிக்குப்பம் பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது

Remove ads

பொழுதுபோக்கு மையங்கள்

திரையரங்குகள் அம்பத்தூர் OT அருகே ராக்கி சினிமாஸ், அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே ஸ்ரீ முருகன் சினிமாஸ், செந்தில் நகர் அருகே கண்ணன் தியேட்டர் மூடப்பட்டது. அது டால்பின் விளையாட்டு அகாடமியாக மாற்றப்பட்டுள்ளது. பூங்காக்கள் இந்துஸ்தான் நகர் மாநகராட்சி பூங்கா கள்ளிக்குப்பம், ஐந்து ஆலமரம், கிருஷ்ணாபுரம் மாநகராட்சி பூங்கா (அக்டோபர் 2009 ல் புதுப்பிக்கப்பட்டது), திருவேங்கட நகர் மாநகராட்சி பூங்கா அருகே தாங்கல் ஏரி பூங்கா ஆகியவை உள்ளன.

Remove ads

கல்வி

பள்ளிகள்

ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் பள்ளி (கள்ளிக்குப்பம்), குழந்தை ஏசு மெட்ரிக் பள்ளி (கள்ளிக்குப்பம்) மாநகராட்சி நடுநிலை பள்ளி கள்ளிக்குப்பம், சாரான் மெட்ரிக் பள்ளி கள்ளிக்குப்பம், அம்பத்தூர் பழமையான பள்ளி ஸ்ரீ மஹாகணேச வித்யாசாலா பிற பள்ளிகள் சர் ராமசாமி முதலியார் மேல்நிலை பள்ளி (அரசு உதவி மேல்நிலை பள்ளி)செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, டி.ஐ. மெட்ரிக் மேல்நிலை பள்ளி (AMM அறக்கட்டளை) காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஹுசைன் நினைவு மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஜி.கே. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி 1979 இல் நிறுவப்பட்டது மற்றும் 2005 ஆம் ஆண்டில் வெள்ளி விழாவை கொண்டாடியது,சிபிஎஸ்இ இணைந்துள்ளது) வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலை (சூரப்பட்டு உள்ளது) புதூர் உள்ள லேக் வியூ மெட்ரிகுலேசன் பள்ளி, இம்மானுவல் மெத்தடிஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தெய்வீக மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆசினி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, மற்றும் எபிநேசர் மார்கஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி.

கல்லூரிகள்

வேலம்மாள் பொறியியல் கல்லூரி அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில் கள்ளிக்குப்பதில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மேனம்பேடு) சோகா இகேதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மதானங்குப்பம்) பென்சன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சமையல் கலை கல்லூரி மற்ற கல்லூரிகளில் சில கள்ளிக்குப்பம் அருகில் உள்ளது

வழிபாட்டுத் தலங்கள்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இது அம்பத்தூரில் மிகவும் பழமை மிகுந்த கோவில் இது பழைய சென்னை- திருவள்ளூர் சாலையில் உள்ளது தென் திருப்பதி,கள்ளிக்குப்பம் அயப்பன் திருக்கோவில், ஸ்ரீ தேவி தண்டு துலக்கனத்து அம்மன் திருக்கோவில் 5 ஆலமரம் வெங்கடாபுரம், கங்கை அம்மன் கோயில் (சோழபுரம்), செல்வா விநாயகர் கோயில் (சத்யபுரம்), சக்தி விநாயகர் கோயில் (T. V. Nagar), முத்து மாரியம்மன் கோவில் அம்பத்தூர் OT, ராகவேந்திரர் கோவில் (வெங்கடாபுரம்), சாய் பாபா கோயில் (அம்பத்தூர் - ரெட்ஹில்ஸ் சாலை), தென் பழனி ஆண்டவர் திருக்கோவில் (விநாயகபுரம்), வீர கணபதி (அம்பத்தூர் OT), அய்யா வைகுண்டர் திருக்கோவில் (ஒரகடம்), விஜயம்பிகை திருக்கோவில் (விஜயலக்ஷ்மிபுரம்), கங்கை அம்மன் திருக்கோவில், ஆயிரங்காலத்து அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் (சக்தி நகர்), பெருமாள் திருக்கோவில் (கள்ளிக்குப்பம்), செயின்ட் ஜோசப் தேவாலயம், புனித அந்தோனி தேவாலயம் T.G அண்ணா நகர், ரோமன் காதொலிக் மற்றும் கிறிஸ்து தேவாலயம் (CSI), வனத்தின் வாசல் தேவாலயம் மற்றும் ஞானகண்மலை தேவாலயம் (மதானங்குப்பம்).

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads