அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் (Kodandaramaswamy Temple, Ayodhyapatinam) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாபட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1] இக்கோயில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோவில், சேலம், பெயர் ...
Remove ads

தொன்மம்

ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவன், விபீடணன் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர். அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது. என்ற தொன்மக்கதை இத்தலம் குறித்து நிலவுகிறது.

கட்டடக்கலை

இந்தக் கோயிலானது ஐந்து நிலை இராசகோபுரத்தையும், உயரமான விளக்குத் தூணையும் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. விளக்குத் தூணின் அடியில் கருடாழ்வார், சங்க சக்கர உருவங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலில் விநாயகர், கருடாழ்வர், ஆஞ்சநேயர், ஆழ்வர்கள் சிற்றாலயங்களும் உள்ளன. கருவறையின் முன்புறம் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையில் இராமர் பட்டாபிசேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார். பொதுவாக வைணவக் கோயில்களில் தாயார் வலப்புறத்தில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இடப்புறத்தில் தாயார் எழுந்தருளியுள்ளார். அருகில் கருடாழ்வார் இராமரை வணங்கி நின்ற நிலையில் உள்ளார்.

கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கியவாறு ஆனுமார் அருள் பாலிக்கிறார். பன்னிரு ஆழ்வார்களுக்கு இங்கு தனிச் சந்நிதியில் உள்ளனர். இக்கோயியில் 28 தூண்களை உடைய மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள தூண்களில் கண்ணன் கோபியரோடு நீராடுதல், பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள், இராமர் பட்டாபிசேகக் காட்சி, பரதன் சத்ருக்னன் சிற்பம் போன்றவை தூணில் செதுக்கபட்டுள்ளன. இக்கோயிலைக் கட்டியதாக கருதப்படும் திருமலை நாயக்கரின் உருவமமும், அவரது தேவியின் உருவமும் தூணில் செதுக்கபட்டுள்ளன. இந்த மண்டபத்தில் உள்ள ஒரே தூணில் தசாவதாரக் காட்சிகள் அனைத்தும் செதுக்கபட்டுள்ளன. இவ்வாறு சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உட் கூறையில் கஜேந்திரமோட்சம், கண்ணனின் சிறுவயது குறும்புகள் போன்றவை ஓவியங்களாக தீட்டபட்டுள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன.[2]

Remove ads

நிருவாகம்

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசித் திருவிழா, பங்குனித் திருவிழா, இராம நவமி, நவராத்திரி போன்ற நாட்களில் இத்தல இறைவன் பலவேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா செல்வார்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads