திருமலை நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமலை நாயக்கர் (Thirumalai Nayak), மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.[1]
Remove ads
ஆரம்பகாலம்
இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயினு அய்யலுகாரு என்பதாகும்.[2] இவர் பலிஜா சமூகத்தை சேர்ந்தவர்.[3] முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
ஆட்சிப் பகுதிகள்
திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.
ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்.
- திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள
- மதுரை,
- திண்டுக்கல்,
- ராமநாதபுரம்,
- சிவகங்கை,
- புதுக்கோட்டை,
- மணப்பாறை,
- கோயம்புத்தூர்,
- சேலம் மற்றும்
- திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன.
இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்கள்தான்.
Remove ads
கட்டிடக்கலை


தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார். திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. புதுமண்டபம் கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட இராயகோபுரம் கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது.
மணிமண்டபம்
திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.[4]
பட்டங்கள்
திருமலை நாயக்கரின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மூலம் அவருக்கு பல பட்டப் பெயர்கள் இருந்துள்ளமை அறியமுடிகிறது. செப்பேடுகளில் இவரின் பெயரின் முன்பாக கச்சி என இட்டு, "கச்சி திருமலை" என்றே அழைப்பது வழக்கமாக உள்ளது. [5]
- மும்முரசறையும் முத்தமிழ் வினோதன்
- தவனெறியுள்ளவன்
- சத்தியவாசகன்
- சிவநெறி தளைக்க திருநீறுமிட்டவன்
- சொக்கநாதருக்கு முக்கிய குணவான்
- கச்சியிலதிபதிபன்
- உச்சிதபோஜன்
- அச்சுத அரியின் மெச்சிய பாலன்
- வங்கி நாராயணன்
- மருவலர்கள் கண்டன்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads