அய்டன் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அய்டன் மாகாணம் (Aydın Province, துருக்கியம்: Aydın ili ) என்பது தென்மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும், இது ஏஜியன் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. மாகாண தலைநகரம் அய்டன் நகரம் ஆகும். இது சுமார் 150,000 (2000) மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் பிற நகரங்களான திடிம் மற்றும் குசாதாசின் கோடைகால கடலோர உல்லாச நகரங்களாக உள்ளன.

வரலாறு

அய்டன் பண்டைய திரேசியர்களால் நிறுவப்பட்டது மேலும் ஒரு காலத்தில் டிராலெஸ் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதி ஒரு பூகம்ப மண்டலமாகும். அய்டன் நகரமானது எசுபார்த்தா, ஃபிரைஜியன்ஸ், அயோனியர்கள், லிடியர்கள், பெர்சியர்கள் மற்றும் பண்டைய ரோமானியர்களால் அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. 1186 ஆம் ஆண்டில் செல்யூக் துருக்கியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர், அதைத் தொடர்ந்து அய்டினிட்களின் அனடோலியன் பெய்லிக் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இந்நகரம் இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்த நகரத்திற்கு அய்டன் கோசெல்ஹிசர் என்று பெயரிடப்பட்டது, மேலும் 1426 இல் உதுமானியப் பேரரசுக்குள் கொண்டுவரப்பட்டது.

Remove ads

நிலவியல்

இந்த மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக வடகிழக்கில் மனிசா, வடக்கே இஸ்மிர், கிழக்கில் டெனிஸ்லி, தெற்கே முலா போன்றவை உள்ளன.

மாகாணத்தின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள் சமவெளிப் பகுதியாகும். இந்த சமவெளியானது ஏஷியன் பிராந்தியத்தின் மிகப் பெரிய ஆறான பாய்க் மெண்டெரஸ் ஆற்றுப் பாசனத்தால் வளமான பகுதியாக உள்ளது. மாகாணத்தின் வடக்கே அய்டன் மலைகள் மற்றும் தெற்கே மென்டீஸ் மலைகள் ஆகியன உள்ளன. மாகாணத்தின் மேற்கு முனையானது கொண்டு ஏஜியன் கடற்கரைப் பகுதியாகும். இது இது மெண்டெரெஸ் டெல்டா பகுதியின் முக்கிய பகுதியாக உள்ளது. ஏஜியன் பிராந்தியத்தின் காலநிலை பொதுவாக, கோடையில் மிகவும் வெப்பமாக இருக்கும். ஜெர்மென்சிக் பிராந்தியத்தில் பல வெண்ணீர் ஊற்றுகள் உள்ளன.

மாவட்டங்கள்

அய்டன் மாகாணம் 17 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

தாவரவளம்

கிராமப்புறங்களில் பெரும்பகுதி அத்தி, ஆலிவ் மற்றும் சிட்ரஸ் மரங்கள் உள்ளன குறிப்பாக அத்தி மரங்கள் மிகுதியாக உள்ளன.

Remove ads

பொருளாதாரம்

மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவை முக்கிய வருமான ஆதாரங்களாக உள்ளன.

சுற்றுலா

Thumb
அப்ரோடிசியாஸில் உள்ள அப்ரோடைட் கோயில்

கடலோர நகரங்களான திதிம் மற்றும் குசாதாஸ் ஆகியவை சுற்றுலா நகரங்களாகும். குசாதாசே திலெக் தீபகற்பத்திற்கு அருகில் - பயாக் மெண்டெரெஸ் டெல்டா தேசிய பூங்கா உள்ளது, அதே சமயம் டிடிமில் அப்பல்லோ, கடற்கரைகள் மற்றும் அருகிலுள்ள மிலேடோஸின் பழங்கால இடிபாடுகள் போன்றவையும் உள்ளன. பண்டைய கரியன் நகரங்களான அலிண்டா மற்றும் அலபாண்டா உள்ளிட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த மாகாணத்தில் உள்ளன.

வேளாண்மை

Thumb
அய்டன் அத்தி

அய்டன் மாகாணமானது துருக்கியில் அத்திப்பழங்களை உற்பத்தி செய்யும் முன்னணி பகுதியாகும்.   மேலும் உலர்ந்த அத்திப்பழங்களை உலகளவில் ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பழங்களானது உலக சந்தைகளில் சமீப காலம் வரை "இசுமீர்ரி அத்தி" என்று அழைக்கப்பட்டது. இந்த அத்திப்பழத்துக்கு முன்னுரிமை கொடுத்து இசுமீரிலிருந்து பிற இனத்தை விட இது ஏற்றுமதி செய்யப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டது. இந்த அத்தப்பழத்தின் மொத்த வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு இசுமீரி மையமாக இருப்பதன் காரணமாக இசுமீரி இந்த பெயரைப் பெற்றது. ஆனால் உண்மையில் இந்த பழமானது பாரம்பரியமாக அய்டனில் பயிரிடப்பட்டது. துருக்கியில் இந்த அத்திக்கு பயன்படுத்தப்படும் சொல் "அய்டன் அத்தி" ( துருக்கியம்: Aydın inciri ) என்பதாகும். துருக்கியில் ஒரு ஆண்டில் தோராயமாக 50,000 டன் உலர்ந்த அத்திப்பழங்கள் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட இவை அனைத்தும் அய்டானில் இருந்து வந்தவையே ஆகும்.[1] அய்டன் மாகாணத்திற்குள், சிறந்த அத்திப்பழங்கள் ஜெர்மென்சிக்கில் வளர்க்கப்படுகின்றன. ஐமான் மெமெசிக், மன்சானிலா மற்றும் ஜெம்லிக் வகைகயான ஆலிவ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.[2] அத்துடன் கஷ்கொட்டை, பருத்தி, ஆரஞ்சுவகை பழங்கள், தர்பூசணி மற்றும் பிற பழங்கள் உற்பத்தியாகின்றன.

தொழில்

அய்டனுக்குள் சில விளக்குத் தொழில்கள் உள்ளன

அட்னான் மெண்டரெஸ் பல்கலைக்கழகம் 1990 களில் அய்டன் நகரில் கட்டப்பட்டது மற்றும் மாகாணம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது.

காணக்கூடிய இடங்கள்

Thumb
திடிமில் உள்ள அப்பல்லோ கோயில்

அய்டன் நகரில் ஏராளமான பழங்கால இடிபாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு கால பள்ளிவாசல்கள் உள்ளன. மாகாணமானது கிராமப்புறங்கள் மற்றும் இயற்கைக்காட்சிகள் ஏஜியன் கடற்கரையின் நீட்சி மற்றும் பல வரலாற்று தளங்களை உள்ளடக்கியது:

உள்கட்டமைப்பு

சாலைகள்

இசுமீர் முதல் அய்டான் சாலை வழியானது 1990 களில் அமைக்கப்பட்டது மற்றும் இது நகரின் முக்கிய பாதையாகும்.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads