அரசர்குளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசர்குளம் (ஆங்கிலம்: Arasarkulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 4,355 ஆண்கள், 4,829 பெண்கள் ஆவார்கள். அரசர்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும்.திருச்சிராப்பள்ளி விமான நிலையம் இங்கிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ளது.
தேவர்கள்,முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயமாகும்.இக்கிராமத்திலிருந்து பெரும்பான்மையான பேர்கள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் வேலைக்காக சென்றுள்ளனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியின் கீழும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் கீழும் இந்த ஊர் வருகிறது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி போன்றவைகள் அரசு சார்பிலும், அல்ஹிதாயா அரபி பள்ளி ஜமாஅத் சார்பிலும் இயங்கிவருகிறது.
ஒன்றிய அரசு நிறுவனங்களான பாரத ஸ்டேட் பாங்கும்,இந்தியன் ஓவர்சீஸ் பேங்கும்,அஞ்சல் நிலையம் , தொலைபேசி இணைப்பகமும் இங்குள்ளது.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு நூலகமும், தவ்ஹீத் ஜமாஅத் நூலகம் போன்ற தனியார் நூலகங்களும் இயங்கி வருகிறது.
பகுதி நேரமாக இயங்கக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையும் உள்ளது.இந்த ஊர், நாகுடி காவல் நிலைய எல்லைக்குள்ளும்,அறந்தாங்கி நீதிமன்ற எல்லைக்குள்ளும் வருகிறது.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads