அரமேயர்கள்

From Wikipedia, the free encyclopedia

அரமேயர்கள்
Remove ads

அரமேயர்கள் (Arameans; ʼaramáyé) பண்டைய அண்மைக் கிழக்கின், லெவண்ட் பிரதேசத்தில் ஆரம் எனும் பகுதியில், வடமேற்கு செமிடிக் மொழிகள் குடும்பத்தின் ஒரு பிரிவான அரமேய மொழி பேசிய பழங்குடி மக்கள் ஆவார்.

Thumb
தெற்கு லெவண்டின் வடமேற்கில் அரமேய மக்கள் வாழ்ந்த பகுதி, கிமு 830

அரமேயர்கள் கிமு 11-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 8-ஆம் நூற்றாண்டு வரை லெவண்ட், அனதோலியா மற்றும் பபிலோனியாவின் சில பகுதிகளை வென்று தங்களுக்குரிய ஆட்சிப் பகுதிகளை நிறுவி தன்னாட்சியுடன் ஆண்டனர்.

கிமு 9-ஆம் நூற்றாண்டில், அரமேயர்களின் ஆட்சிப் பகுதிகளை புது அசிரியப் பேரரசினர் (கிமு 935 – 605) கைப்பற்றினர்.[1]

புது அசிரியப் பேரரசின் மன்னர் மூன்றாம் டிக்லாத்-பிலேசர் (கிமு 745–727) ஆட்சிக் காலத்தில், கிமு 8-ஆம் நூற்றாண்டில், அக்காதிய மொழியுடன், அரமேய மொழியும் ஆட்சி மொழியானது.

புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அகாமனிசியப் பேரரசு (கிமு 550 – 330) ஆட்சியின் போது, அக்காதிய மொழி, பழைய பாரசீக மொழி, சிரியாக் மொழி மொழிகளில் அரமேய மொழியின் தாக்கம் அதிகரித்தது.

கிபி 1 – 4-ஆம் நூற்றாண்டு வரை அரமேயர்கள் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றத் துவங்கினர்.

கிபி 7-ஆம் நூற்றாண்டுகளில் இசுலாமின் எழுச்சி காரணமாக, மேற்கு அரமேய மொழியின் பயன்பாட்டின் செல்வாக்கு இழந்தது.

இருப்பினும் தற்கால யூத மக்கள் தொடர்ந்து அரமேய மொழியினை புதிய வடிவத்தில் எழுதிப் பேசுகின்றனர்.

மேலும் சிரியா மற்றும் துருக்கியிலிருந்து புலம்பெயரந்த சிரியாக் கிறித்தவர்கள் அரமேய மொழி பேசுகின்றனர்.[2] இஸ்ரேல் அரசு 2014-இல் அரமேய மக்களை, மொழிச் சிறுபான்மையின மக்களாக ஏற்றுக் கொண்டுள்ளது.[3][4]

Remove ads

சமயம் மற்றும் கலை

Thumb
அரமேய மக்கள் வணங்கிய பிற்காலத்திய சுமேரிய கடவுள்களான இஷ்தர், சின் உது மற்றும் சமாஷ், கிமு 12ம் நூற்றாண்டு

அரமேயர்கள் மொசொப்பொத்தோமியக் கடவுள்களான ஆதாத், இஷ்தர் மற்றும் உதுக் கடவுள்களையும், பின்னர் கானானிய மற்றும் போனிசியர்களின் கடவுள்களையும் வணங்கினர். மேலும் வெளிநாடுகளில் வாழும் அரமேய மக்கள் அந்தந்த நாட்டு மக்கள் வணங்கும் கடவுள்களை வழிபட்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூல்களின் பட்டியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads