அரராத்து இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

அரராத்து இராச்சியம்
Remove ads

உரார்த்து இராச்சியம் (Urartu) (/ʊˈrɑːrt/), விவிலியம் கூறும் அரராத்து மலைகளை மையமாகக் கொண்ட இராச்சியம் ஆகும். தற்கால ஆர்மீனியாவின் மேட்டு நிலங்களில் வளர்ந்த அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள், தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.[1]

Thumb
அரராத்து இராச்சியத்தின் அமைவிடம்

அரராத்து இராச்சியத்தின் நிலப்பரப்புகள் மேற்கில் அனதோலியா மற்றும் மெசொப்பொத்தேமியாவும், கிழக்கில் ஈரானியப் பீடபூமி, ஆர்மீனியன் மேட்டு நிலங்களைக் கொண்டது. அரராத்து இராச்சியத்தின் தென்மேற்கில் புது பாபிலோனியப் பேரரசும், தெற்கில் மீடியாப் பேரரசும் இருந்தது.

இவ்விராச்சிய மக்கள் ஆப்பெழுத்து முறையில் எழுதப்பட்ட உரார்த்து மொழி பேசினர்.[2][3][4][5][6]

உரார்த்து இராச்சியம் கிமு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், பாரசீகத்தின் மீடியாப் பேரரசினர் கிமு 590ல் அரராத்து இராச்சியத்தை முழுவதுமாகக் கைப்பற்றினர். தற்கால ஆர்மினிய மக்களின் முன்னோர்கள் உரார்த்து மொழி பேசியவர்கள் எனக்கருதப்படுகிறது.[5][7][8][9]

Remove ads

அரராத்து இராச்சியத்தின் ஆட்சியாளர்கள்

Thumb
கிமு 858 – 840ல் முதல் பேரரசர் அரமு காலத்திய அரராத்து இராச்சியம் (மஞ்சள் நிறத்தில்)
  1. அரமு - கிமு 858–844
  2. முதலாம் சர்துரி - கிமு 844–828
  3. இஷ்புய்னி - கிமு 828–810
  4. மெனுவா - கிமு 785–753
  5. முதலாம் அர்கிஷ்தி - கிமு 828–810
  6. இரண்டாம் சர்துரி - கிமு 753–735

வேளாண்மை

புது அசிரியப் பேரரசில் கையாண்ட வேளாண் முறையே அரராத்து இராச்சியதிலும் கையாளப்பட்டது. போர்க் கைதிகளை தொழிலாளர்களாக பயன்படுத்தினர். தானியங்கள், குதிரைகள், காளைகள் முதலியன வரியாக அரசுக்கு செலுத்தினர். அமைதிக் காலங்களில் அரராத்து வணிகர்கள், அசிரியர்களுடன் மது, இரும்பு, குதிரைகள் மற்றும் கால்நடைகளை பண்டமாற்று முறையில் வணிகத்தில் ஈடுபட்டனர்.

அரராத்து இராச்சியத்தில் வேளாளாண்மை
Thumb
 
Thumb
 
Thumb
வேளாண் கருவிகள் அம்மியும், குழவியும்
Remove ads

அரராத்து இராச்சியத்தின் தொல்பொருட்கள்

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரராத்து இராச்சிய தொல்பொருட்கள்:

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads