அர்கீசொ

நகரங்கள் From Wikipedia, the free encyclopedia

அர்கீசொ
Remove ads

அர்கீசொ (சோமாலி: 'Hargeysa', அரபி: هرجيسا)[1][2] சோமாலிலாந்துவின் தலைநகராக உள்ளது. சோமாலிலாந்து தன்னைத்தானே குடியரசு நாடாக 1991 இல் அறிவித்துக் கொண்டப்பொழுதும் சர்வதேச அளவில் சோமாலியாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.[3]

விரைவான உண்மைகள் அர்கீசொ ஹர்கெய்சாهرجيسا, நாடு ...

இடைக்காலத்தில் அர்கீசொ அடல் சுல்தானியகத்தின் அங்கமாக இருந்தது. 1941இல் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த சோமாலிலாந்தின் தலைநகரானது. 1960இல் பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற சோமாலிலாந்து, இத்தாலிய ஆட்சியிலிருந்து விடுபட்ட சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சூலை 1 அன்று சோமாலியக் குடியரசாக உருவானது.[4][5]

ஓகோ மலைத்தொடரின் பள்ளத்தாக்கு ஒன்றில் அர்கீசொ அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 1,334 m (4,377 அடி) ஆகும். இங்கு புதிய கற்கால பாறை ஓவியங்களைக் காணலாம். அருமணி வெட்டுதல், கட்டுமானம், சில்லறை வர்த்தகம், ஏற்றுமதி/இறக்குமதி செயற்பாடுகளுக்கு வணிக மையமாக விளங்குகின்றது.[1]

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads