அல்த்தாய் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அல்தாய் பிரதேசம் (Altai Krai, உருசியம்: Алта́йский край, அல்த்தாய்ஸ்க்கி கிராய்) என்பது உருசியாவின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு (பிரதேசமாகும். இதன் எல்லைகளாக, கடிகாரச் சுற்றில் மேற்கிலிருந்து, கசக்கஸ்தான், நோவசிபீர்சுக் மாகாணம் மற்றும் கெமரோவோ மாகாணம், மற்றும் அல்த்தாய் குடியரசு ஆகியன உள்ளன. இந்த கிராயின் தலை நகரமாக பர்னவுள் நகரம் உள்ளது. 2010 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை 2,419,755 ஆகும்.[9]
Remove ads
நிலவியல்

அல்தாய் பிரதேசத்தைச் சுற்றிலும் மலைகள், ஏரிகள், ஆறுகள், புல்வெளிகள் சூழ்ந்துள்ளன.[13]
இங்கு நிலவும் காலநிலையானது நீண்ட குளிர்ந்த வறண்ட குளிர்காலமும், வெப்பமும், வறண்ட கோடைக்காலமும் கொண்டது. பிராந்தியத்தின் முக்கிய நீர்வழியாக ஓப் நதி உள்ளது. மேலும் பையா மற்றும் கட்டுனா ஆகிய பிற ஆறுகள் முக்கியமானவை ஆகும். இங்கு மிகப்பெரிய ஏரிகளான குளுந்தின்கோய் ஏரி, குச்சுக்ஸ்கோயி ஏரி, மிக்காயோலோவிஸ்கோய் ஏரி ஆகியன உள்ளன.[14]
அல்தாய் பிரதேசம் கட்டடங்களுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள், கனிமவளம் கொண்டதாகவுள்ளது. இங்கு கிடைக்கும் குறிப்பிடத்தக்கக் கனிமங்கள் ஈயம் மற்றும் இரும்பு தாது, மாங்கனீசு, தங்குதன், மாலிப்டினம், பாக்சைட், தங்கம் ஆகும். காடுகளின் பரப்பளவு 60,000 km² ஆகும்.[14]
சைபீரியாவின் இந்தப் பிராந்தியம் பல்லுயிர் பெருக்கத்தில் முதன்மை வாய்ந்ததாகும். இப்பிராந்தியத்தின் 1.6 மில்லியன் எகடர் பரப்பளவை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. மேலும் அழிந்துவரும் பனிச்சிறுத்தைகளின் வாழ்விடமாக இப்பிராந்தியம் உள்ளது.
அல்தை தேனீக்கள் வளர்ப்பு மூலமாக பிரதேசத்தில் ஆரோக்கியமான, உலகின் தரமான தேன் கிடைக்கிறது. வரலாற்று ரீதியாக இம்மக்களால் தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த தேன்மீது உருசிய ஜார்கள் வரிவிதித்து இருந்தனர்.
Remove ads
வரலாறு
இப்பிராந்தியம் பழங்காலத்தில் மக்கள் கடந்து செல்லும் ஒரு பெரிய பாதையாக இருந்தது.[15] நாடோடி மக்கள் இடப்பெயர்வு காலங்களில் இப்பிராந்தியத்தின் வழியாக கடந்து சென்று வந்தனர். தொல்லியல் தரவுகள் இங்கு பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததாக கூறுகிறது.[14] அல்தை மக்கள் துருக்கி மக்களினத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் கி.மு இரண்டாம் நூற்றாண்டலவில் இங்கு குடியேறியதாகக் கருதப்படுகிறது.[16]
இப்பிரதேசம் க்சியாங்னு பேரரசின் ஆட்சிப்பகுதியாக (கி.மு209 முதல் கி.பி-93 ) வரையும், மங்கோளிய க்சியாபிள் நாடாக (93-234) காலகட்டத்திலும், ரௌரன் காகனேட் ஆட்சிப்பகுதியாக (330-555), மங்கோலியப் பேரரசின் பகுதியாகவும் (1206-1368), தங்க நாடோடிக் கூட்டத்தின் பகுதியாக, வடக்கு யுவன் (1368-1691) சுவாங்கர் கானடி கட்டுப்பாட்டில் (1634–1758) காலகட்டத்தில் இருந்தது.[17]
அல்தாய் கிராய் நகரம் பெண்கள் மற்றும் குழந்தைகளை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஆண்மக்களின் மணைவியாக்க வேண்டி கடத்திவரும் நகரங்களில் ஒன்றாக இருந்தது - குறிப்பாக "வெளிநாட்டினர்" / கோலா நார்வீஜியன், லித்தவியன்கள், லிதுவியனகள் போன்ற "பிற இனத்தவர்கள்" - கடின உழைப்பு முகாம்களுக்கு சோவியத் ரஷ்யாவுக்கு கடத்தப்பட்டனர். Ref.Lietuvos žydų tremtinių sąrašas Parengė Galina Žirikova pagal: „Genocido aukų vardynas 1939-1941 m.“ Lietuvos gyventojų genocido ir rezistencijos centras. 1998-2005 m.
Remove ads
பாரம்பரியம்
கொடி
அல்த்தாய் பிரதேசத்தின் கொடி சிவப்பு நீலத்துடன் மஞ்சள் பட்டையை விவசாயத்தின் சின்னமாக கொண்டுள்ளது. கொடியின் மையத்தில் அல்த்தாய் பிரதேசம் மரபுச்சின்னம் உள்ளது.
சின்னம்
அல்த்தாய் பிரதேசத்தின் சின்னம் 2000 இல் உருவாக்கப்பட்டது.

அரசியல்
சோவியத் காலத்தில், பிரதேசத்தின் உயர் அதிகாரம் மூன்று நபர்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது: முதலில் அல்தை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளர் (உண்மையில் இவரிடமே பெரும்பாலான அதிகாரம்), சோவியத் கிராய் தலைவர் (சட்டமியற்றும் அதிகாரம்) மற்றும் கிராய் நிர்வாக குழு தலைவர் (நிறைவேற்று அதிகாரம்) ஆகியோர் ஆவர். சோவியத் வீழ்ச்சியடைந்த 1991 ஆம் ஆண்டுவரை இந்த நிலை நீடித்தது. அதன் பிறகு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளரிடம் இருந்த கிராயின் நிர்வாகத் தலைமைப் பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, கிராய்க்கு நியமிக்கப்பட்ட / தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய பாராளுமன்றம் அதிகாரம் மையமானது. அல்த்தாய் பிரதேசத்தின் சாசனம் பிராந்திய அடிப்படையான சட்டம் ஆகும். அல்த்தாய் பிரதேச சட்டமன்றம் பிராந்திய ரீதியிலான சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு ஆகும். கிராய் சட்டமன்றம் சட்டமியற்றும் அதிகாரம், தீர்மானங்களை இயற்றுதல், மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை மேற்பார்வயிடுதல், நடைமுறைப்படுத்துதல், கவணித்தல் ஆகிய அதிகாரங்களை உடையது. கிராய் அரசானது உயர்ந்த நிர்வாக அமைப்பாக உள்ளது. இதனுடன் மாவட்ட நிர்வாகங்கள் போன்ற, பிராந்திய நிர்வாக அமைப்புகள் அடங்கும். கிராயின் நிர்வாகத்தின் உயர்ந்த ஆட்சியாளராக உருசிய அரசியலமைப்பின்படி பிரதேச சாசனத்திற்கு ஏற்ப ஆளுநர் உள்ளார்.
2005 ஆகத்து 7 அன்று கிராயின் நிர்வாகத் தலைவராக இருந்து மிகைல் யிவ்டோகிமோவ் ஒரு சீருந்து நேர்ச்சியில் இறந்தார்.
Remove ads
மக்கள் வகைப்பாடு
மக்கள் தொகை: 2,390,638 (2014 est.);[18] 2,419,755 (2010 Census);[9]
2010 மக்கள் கணக்கெடுப்பின்படி,[9] உருசிய இனத்தவர் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக 94% உள்ளனர். செர்மானியர் இரண்டாவது பெரிய குழுவாக 2% உள்ளனர். பிறக் குழுக்களான உக்ரேனியர் (1.4%), கசக்குகள் (0.3%), தாதரர் (0.3%),பெலோருசியர் (0.2%), ஆர்மேனியர் (0.3%), மேலும் 40,984 மக்ள் தங்கள் இனத்தைப்பற்றி தெரிவிக்கவில்லை.[19]
- 2012 முதன்மை புள்ளி விவரம்
- பிறப்புகள்; 32695 (1000 பேருக்கு 13.6)
- இறப்புகள்; 35030 (1000 பேருக்கு 14.6)
- கருத்தரிப்பு விகிதம்
2009 - 1.62 | 2010 - 1.63 | 2011 - 1.65 | 2012 - 1.81 | 2013 - 1.83 | 2014 - 1.84 | 2015 - 1.80(e)
சமயம்
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி[21] அல்தாய் பிரதேசத்தில் 22.6% பேர் உருசிய மரபுவழி கிருத்தவர்கள், 3% பேர் பொதுவான கிருத்துவர்கள், 1% பேர் கிழக்கு மரபுவழி கிருத்தவர்கள், 1% பேர் இசுலாமியர், 31% மத நம்பிக்கை அற்றவர்கள், 27% பேர் இறை மறுப்பாளர்கள், 14.4% பேர் பிற சமயங்களை பின்பற்றுபவர்கள்.[21]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads