அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ அல்லூரி சீதாராம இராஜு (Alluri Sitharama Raju district), 4 ஏப்ரல் 2022 ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் மற்றும் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பதேரு ஆகும்.[2][3] இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான அல்லூரி சீதாராம இராஜுவின் நினைவாக இப்புதிய மாவட்டத்திற்கு பெயரிடப்பட்டது.
விசாகப்பட்டினம் மாவட்டத்தின் பதேரு வருவாய் கோட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டத்தின் பகுதிகளை அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5][6]
12,251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிறீ அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தின் மக்கள் தொகை 9.54 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 48.34% ஆகும்.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
சீதாராம அல்லூரி இராஜு மாவட்டம் பதேரு மற்றும் ராம்பச்சோதவரம் என வருவாய் கோட்டங்களும், 22 மண்டல்களும், 2972 கிராமங்களும் கொண்டது.

மண்டல்கள்
பதேரு வருவாய் கோட்டத்தில் 11 மண்டல்களும்; ராம்பச்சோதவரம் கோட்டத்தில் 11 மண்டல்களும் கொண்டது.
அரசியல்




இம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads