அவுரிநெல்லி
ஒரு தாவரவகை, பழவகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவுரிநெல்லி (Blueberries) [1] என்பது ஒரு பூக்குந்தாவரம் ஆகும் இதன் கனிகள் கருநீல நிறமுடையவை இவை Cyanococcus என்ற பேரினத்தவை.[2] இப்பழங்கள் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை (வணிக ரீதியாக ஐரோப்பாவில் அவுரிநெல்லி 1930 வரை அறிமுகப்படுத்தப்படவில்லை).[3]
அவுரிநெல்லி புதர்கள் பொதுவாக நிமிர்ந்த நிலையிலும், சாய்த நிலையிலும் இவற்றின் உயரம் 10 செண்டி மீட்டர் (3.9 அங்குலம்) முதல் 4 மீட்டர் (13 அடி) வரை வேறுபடுகிறன.
இதன் இலைகள் 1-8 செ.மீ (0.39–3.15 அங்) நீளமும், 0.5–3.5 செ.மீ (0.20–1.38 அங்) அகலம் கொண்டவையாகவும். இதன் பூக்கள் மணி வடிவம் கொண்டதாகவும், வெண்மை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்துடனும், சிலசமயங்களில் பசுமைதோய்ந்த நிறத்திலும் இருக்கும். இதன் பழங்களின் முனையில் 5–16 மி.மீ (0.20–0.63 அங்) விட்டம் உடைய கிரீடம் இருக்கும். இப்பழங்கள் முதலில் வெளிர் பச்சை நிறத்திலும், பின்னர் சிவப்பு-ஊதாவாகவும், இறுதியாக பழுக்கு்ம்போது அடர் ஊதா நிறத்தை அடைகின்றன. இவற்றின் மேல் ஒரு பாதுகாப்பு பூச்சாக ஒருவகை மெழுகு பூச்சும் காணப்படுகிறது.[4] இவை கனியும்போது இனிப்பு சுவையாகவும், அதேபொழுது அமிலத்தன்மை கொண்டதாகவும் ஆகின்றன. அவுரிநெல்லி புதர்களில் பொதுவாக கனிகள் வரும் பருவம் அவை உள்ள நிலப்பரப்பு உயரம் மற்றும் அட்சரேகை உள்ளூர் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுகிறது, இதனால் பயிர்களில் பழங்கள் காய்ப்பது இந்த நிலைமைகளை பொறுத்து (வட துருவத்தில்) மே முதல் ஆகஸ்ட் வரை மாறுபடுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads