கால்மீக்கியா

From Wikipedia, the free encyclopedia

கால்மீக்கியா
Remove ads

கால்மீக்கியா அல்லது கால்மீக்கியா குடியரசு (Republic of Kalmykia, உருசியம்: Респу́блика Калмы́кия) உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்றாகும். இதன் தலைநகரம் எலிஸ்தா ஆகும்.[14]

விரைவான உண்மைகள் கால்மீக்கியா குடியரசுRepublic of Kalmykia, Other transcription(s) ...
Thumb
ரஷ்யாவின் உட்குடியரசுகளில் கால்மிகியா
Thumb
தலைநகர் எலிஸ்தாவில், லெனின் சதுக்கத்தில், கால்மிகியா நாடாளுமன்ற கட்டிடம்

ஐரோப்பிய கண்டத்தில் மற்றும் உருசியக் கூட்டமைப்பின் மேற்கு பகுதியில் வச்சிரயான பௌத்தப் பிரிவான, திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் ஒரே நாடு கால்மீக்கியா ஆகும்.[15][16][17] 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கால்மீக்கியா குடியரசின் மக்கட்தொகை 289,481 ஆகும்.[9]கால்மிக் மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது ஒரு பிரபலமான பன்னாட்டு சதுரங்க மையமாகும். காரணம் இதன் முன்னாள் அதிபரான 'கிர்சன் லையும்சின்லோவ்' பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு அமைப்பின் தலைவராவார்.

Remove ads

நிலவியல்

ஐரோப்பிய ருசியப் பகுதியின் தென் மேற்கில் அமைந்துள்ளது. இதன் தென் கிழக்கில் காஸ்பியன் கடல் உள்ளது. கிழக்கு கால்மிகியா நாட்டின் வழியாக வால்கா ஆற்றின் ஒரு பகுதி பாய்கிறது. இதன் பரப்பளவு 76,100 சதுர கிலோ மீட்டராகும்.

நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு கால்மிகியாவின் இயற்கை வளங்கள் ஆகும்.

தட்ப வெட்பம்

கோடைகாலத்தில் 24 பாகை செல்சியஸ் வெயிலும், குளிர்காலத்தில் பூஜ்ஜியம் 5 பாகை செல்சியஸ் குளிரும் காணப்படுகிறது. கால்மிகியாவின் ஆண்டு சராசரி மழை அளவு, கிழக்குப் பகுதியில் 170 மில்லி மீட்டரும், மேற்கு பகுதியில் 400 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.

இனக் குழுக்கள்

கால்மிகியாக் குடியரசில், 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கல்மைக் மக்கள் 57.4%, ருசியர்கள் 30.2%, தார்ஜின் மக்கள் 2.7%, செசன்யர்கள் 1.2%, கசக்ஸ்தானியர்கள் 1.7%, துருக்கியர்கள் 1.3%, காசேசியர்க்ள் 0.8%, உக்ரையனியர்கள் 0.5%, ஜெர்மனியர்கள் 0.4% உள்ளனர்.

சமயங்கள்

Thumb
தலைநகர் எலிஸ்தாவில் பௌத்த பொற்கோயில்
Thumb

கால்மியாவின் சமயங்கள் (2012)[18][19]

  டென்கிரிசம் & சாமனிசம் (3%)
  பிறர் (1%)
  அமைப்புசாரா கிறித்தவர் (1%)
  இந்து (0.4%)
  சமயம் சாராத ஆன்மிகர் (13%)
  நாத்திகர் (13%)
  பிறர் & உறுதி செய்யப்படாதோர் (9.0%)

திபெத்திய பௌத்த சமயத்தைப் பிற்றுபவர்கள் கால்மிகியா குடியரசில் பெரும்பான்மையினராக உள்ளனர். 2012ஆண்டு கணக்கெடுப்பின்படி, 37.6% பௌத்தம், 18% ருசியக் கிறித்தவம், 4% இசுலாம், 3% கால்மைக்கியா சாமானிசம், 1% கத்தோலிக்கம் மற்றும் புராட்டஸ்டண்டுகள் அல்லாத கிறித்தவர்கள், 1% கிழக்கு கிறித்தவம்,0.4% இந்து, 9% சமயமில்லாதவர்கள், 13% நாத்திகர்கள், 13% ஆன்மிகவாதிகள் ஆனால் சமயம் சாராதவர்கள் உள்ளனர்.

Remove ads

அரசியல்

ருசிய அதிபரே கால்மிகியா குடியரசின் தலைவர் வேட்பாளரை தேந்தெடுப்பார்.

பொருளாதாரம்

வேளாண் தொழில் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

நாட்டின் வரவு செலவு ஆண்டிற்கு (பட்ஜெட்) தொகை 100 மில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும்.

கல்வி

தலைநகர் எலிஸ்தாவில் கல்மைக் அரசு பல்கலைக்கழகம் பெரிய உயர்கல்வி நிலையம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads