அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஹம் பிரம்மாஸ்மி (Aham Brahmasmi) (சமசுகிருதம்:अयम् आत्मा ब्रह्म) என்பது `நான் பரம்பொருளாக இருக்கிறேன்` என்று பொருள்படும் மகாவாக்கியம் ஆகும் (பிரகதாரண்யக உபநிடதம் (1.4.10). அத்வைத மரபில் தத்துவமசி என்ற மகாவாக்கியம் உபதேச வாக்கியம் என்றும், `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியம் அனுபவ வாக்கியம் என்றும் அத்வைத வேதாந்திகள் கூறுகின்றனர்.
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மகாவாக்கியங்கள் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இங்கும் அஹம் என்பது சீவ சைதன்னியத்தையும், பிரம்மம் என்பது பிரம்ம சைதன்னியத்தையும் குறிப்பிடுவதால் அவைகளின் ஒருமையை பாகலட்சணையின் மூலம் விசாரணை செய்து தத்துவமசி என்ற மகாவாக்கியத்தின் விசயத்தில் விவரித்து இருப்பதை போன்றே `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியத்தின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும். துறவற வாழ்வை மேற்கொள்ளும் துறவிகளுக்கு மகா வாக்கியங்களின் கருத்து விரிவாக விளக்கப்படுகிறது.
Remove ads
பிற மகா வாக்கியங்கள்
- பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) - "பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)
- அயம் ஆத்மா பிரம்ம (अयम् आत्मा ब्रह्म) - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
- தத் த்வம் அஸி (तत् त्वं असि) - "அது (பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)
உசாத்துணை
- பிரகதாரண்யக உபநிடதம் Brihadaranyaka Upanishad complete PDF ebook
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads