ஆகஸ்டு 2006
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆகத்து 2006 (August 2006), ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமையில் முடிவடைந்தது.
<< | ஆகத்து | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXV | ||||||
செய்தித் தொகுப்பு
- ஆகஸ்ட் 1 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல், 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலியத் தயாரிப்பான டோறா படகு அழிக்கப்பட்டது.தமிழ்நெட்
- ஆகஸ்ட் 2 - திருகோணமலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் தொடர்ச்சியாக சமர் நடைபெற்று வருகிறது. திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அதனைத் தொடர்ந்து முன்னேறினர். புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள இலங்கை இராணுவத்தின் கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் காந்திநகர், பாலத்தோப்பூர், தோப்பூர், செல்வநகர் ஆகிய இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர் என்றும் தமிழ்நெட், புதினம் பரணிடப்பட்டது 2007-10-06 at the வந்தவழி இயந்திரம் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது வெளியாகும் புதிய தகவல்களின்படி இலங்கை இராணுவம், மூதூர் பிரதேசத்தை மறுபடி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர எதிர்த்தாக்குதலை தொடுத்துள்ளது. இவ்வெதிர் தாக்குதலில் முப்படையும் பயன்படுத்தப்படுகிறது. இம்மோதலின்போது மூதூர் பிரதேசத்தை சேர்ந்த தேவாலயம் ஒன்றும் மூதூர் வைத்தியசாலையும் படையினரின் எறிகணைகளால் தாக்கப்பட்டுள்ளது. மூதூரை சேர்ந்த 8 வயதான சிறுவன் ஒருவன் இத்தாக்குதல்களின்போது கொல்லப்பட்டுள்ளதாக செய்திக தெரிவிக்கின்றன. மூதூர் பிரதேசத்தின் தொலைத்தொடர்பு நிலையம் தாக்கப்பட்டுள்ளதோடு தொலைபேசி, மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 3 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணைவீச்சில் பரிதாபகரமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர் எந்தவித மருத்துவ வசதியும் இன்றித் தத்தளிப்பு. மூதூரிற்கான தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயேயுள்ளது. (தமிழ் நெட்)
- ஆகஸ்ட் 3 - திருகோணமலையில் மூதூர் பகுதியிலிந்து காயமடைந்த பொதுமக்களை வைத்தியசாலைக்குக் கொண்டுவந்த ஆம்புலனஸ் வண்டி தாக்குதலுக்கு இலக்காகி இருவர் மரணம். தமிழ் ஓசை பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- ஆகஸ்ட் 4 - திருகோணமலையில் பொதுமக்கள் யுத்தத்தில் தாக்கப்படுவதைக் கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது. திருகோணம்லையில் கடைகள் அலுவலகங்கள் யாவும் மூடிய நிலையிலிருந்தன.
- 2006 - ஐக்கிய நாடுகள் அவையின் விசேடகுழுக்கள் இரண்டு திருகோணமலையில் பகல் 1:00 மணியளவில் ஒன்று சீனக்குடாவூடாவும் கின்னியா மற்றொன்று கந்தளாப் பகுதியிலும் நிலைமைகளை அவதானித்துத் மாலை 6:00 மணியளவில் திரும்பியுள்ளது. மூதூர் நத்வதுல் உலமா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடமாடிய விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இலக்கு வைத்து மேற்கொண்ட இரானுவ எறிகணைத் தாக்குதலில் கல்லூரியில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் மக்கள் அநேகமான உயிரிழப்புகளை எதிர்கொண்டனர். மூதூர் பகுதியில் வீடுகள் அநேகமாக அழிக்கப் பட்டுச் சுடுகாடாகக் காட்டியளிக்கின்றது. பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து கந்தளாய் பகுதி மற்றும் ஏனைய பகுதிகளிற்குச் சென்றுள்ளனர். கந்தளாய் பகுதியில் 4 பாடசாலைகளில் இடம்பெயந்த மக்களால் நிரம்பி வழிகின்றது. யுத்ததில் காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களும் பலர் கந்தளாய் வைத்திய நிலையத்தில் அநுமதிக்கப் பட்டுள்ளனர். கந்தளாய்ப் பகுதிக்கு விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து வெளியேறுபவர்களை விடுதலைப் புலிகள் சோதனைச் சாவடியில் முகமூடித் தலையாட்டி மூலம் தலையாட்டலிற்கு உட்படுத்தியே வெளியில் விடுகின்றனர். பொதுமக்கள் பலர் மிகநீண்ட தூரத்தை காயங்களுடன் நடையிலேயே கடந்து வருகின்றனர்.வாகன உரிமையாளர்கள் தமது சொந்த வாகனங்களை எரிபொருள் இல்லாத காரணத்தால் கந்தளாய் வரும் வழியில் அனாதையாக விட்டு விட்டு நடையிலே வந்தார்கள். ஓர் பொதுமகன் தான் குடும்பத்துடன் 3 நாட்கள் உணவு ஏதும் இன்றி தண்ணீரை மாத்திரமே குடித்து கந்தளாய்ப் பகுதிக்கு வந்ததாகக் கூறினார். மூதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது வாகனத்தை சில ஆயுத பாணிகள் துப்பாக்கியைக் காட்டி வாகனத்தை பறித்துக் கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
- ஆகஸ்ட் 5, 2006
- திருகோணமலைப் மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட பஸ்கள் தாக்குலுள்ளான பகுதியில் பொதுமக்களிற்கு உதவ காலையில் இருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
- திருகோணமலையில் இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
- புரிந்துணர்வு ஒப்ந்தப்படி பழைய நிலைகளிற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் திரும்பியுள்ளதாகத் தமிழ்நெட் தெரிவிப்பு.
- வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் மூதூர் பகுதியில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டவர்கள் 15 பேர் கோடூரக் கொலை - தமிழ் நெட். ஆரம்பப் படுகொலையில் தப்பிய 2 அலுவலர்கள் உண்மையை உரைக்கலாம் என்ற அச்சத்தில் மூதூர் பகுதியில் தேடிப் பிடிக்கப் பட்டுக் கொலை செய்யப் பட்டனர். மொத்தமாக மூதூர் அலுவலகத்தில் அலுவலகச் சீருடையில் உள்ள ஆபத்துதவிப் பணியாளர்களின் ஒட்டுமொத்தக் கொலையானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- ஆகஸ்ட் 6 - 2006 - திருகோணமலை அம்பியூலன்ஸ் வண்டி எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதில் ஒருவர் பலி. தமிழ்நெட்
- ஆகஸ்ட் 8 - திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- ஆகஸ்ட் 8 - நெடுங்கேணி புதுக்குடியிருப்பு வீதியில் கிளைமோர் தாக்குதலில் ஆம்பியூலனஸ் வண்டி அகப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். தமிழ்நெட்
- ஆகஸ்ட் 9 - திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகலூடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் பலி தமிழ்நெட்
- ஆகஸ்ட் 10 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.(தமிழ்நெட்)
- ஆகஸ்ட் 10 - திருகோணமலை கந்தளாய்க்கு அருகிலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் தொடர்ச்சியாக இடைவிடாது எறிகணைகளை வீசியதில் சுடுகலம் சூடாகி வெடித்ததில் முகாம் தீப்பிடித்தது.(தமிழ்நெட்)
- ஆகஸ்ட் 13 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (தமிழோசை) பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- ஆகஸ்ட் 14 - செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- ஆகஸ்ட் 20 -- திருகோணமலை நீதிமன்ற வீதியில் அநீதியான முறையில் பொதுமகன் ஒருவர் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொலை.
- ஆகஸ்ட் 20 – கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
- ஆகஸ்டு 21 - ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் மரணம்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads