ஆங்கிலேயக் கால்வாய்

கடல் From Wikipedia, the free encyclopedia

ஆங்கிலேயக் கால்வாய்
Remove ads

ஆங்கிலேயக் கால்வாய் (English Channel) அல்லது ஆங்கிலக் கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கி.மீ.. நீளமும் 240 கி.மீ.. அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கி.மீ.. ஆகும்.[1]

விரைவான உண்மைகள் ஆங்கிலேயக் கால்வாய், அமைவிடம் ...
Remove ads

புவியியல்

Thumb
ஆங்கிலக் கால்வாயின் வரைபடம்

இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு (Isle of Wight), பிரான்ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை.

கால்வாய் சுரங்கம்

ஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads