ஆட்டையாம்பட்டி
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆட்டையாம்பட்டி (ஆங்கிலம்:Attayampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி திருச்செங்கோடு, இராசிபுரம் மற்றும் சேலம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களை கொண்டுள்ளது. இப்பேரூராட்சியிலிந்து 3கி.மீ தொலைவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான காளிபட்டி கந்தசாமி கோவிலும், 25 கி.மீ தொலைவில் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. மேலும், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் நெசவுத் தொழில் முக்கிய தொழில் ஆகும்
Remove ads
அமைவிடம்
சேலம் - திருச்செங்கோடு சாலையில் அமைந்த ஆட்டையம்பட்டி பேரூராட்சிக்கு கிழக்கில் இராசிபுரம் 18 கி.மீ.; மேற்கில் திருச்செங்கோடு 25 கி.மீ.; வடக்கில் சேலம் 18 கி.மீ. மற்றும் தெற்கில் நாமக்கல் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
2.4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,649 வீடுகளும்,13,852 மக்கள்தொகையும் கொண்டது.[5]
தொழில்வளம்
இவ்வூரில் நெசவு ஜவுளி தொழில் செய்யும் செங்குந்த முதலியார் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.[6]
ஆட்டையாம்பட்டி கைமுறுக்குக்கு புகழவாய்ந்தது. இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கைமுறுக்கு செய்யும் தொழில் குடிசை தொழிலாக நடந்து வருகிறது. ஆட்டையாம்பட்டி மற்றும் இதைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஏறக்குறைய 200 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முறுக்கு உற்பத்தி சார்ந்த மாவு அரைத்தல், முறுக்கு சுற்றுதல் போன்ற பணிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் நாள் கூலி அடிப்படையில் வேலையில் ஈடுபடுகின்றனர்.[7]
Remove ads
ஊரில் உள்ள வங்கிகள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads