ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம்

சுவீடன் நாட்டு இயற்பியலாளர் From Wikipedia, the free encyclopedia

ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம்
Remove ads

ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (Anders Jonas Ångström, 1814 - 1874 ), ஒரு சுவீடன் நாட்டு இயற்பியலாளர். உப்சாலா பல்கலைக்கழகத்தில் நிறமாலையியல் துறையில் முன்னோடியாக இருந்தவர்.[1] “வெப்பப்படுத்தப்பட்ட ஒரு வளிமம் ( gas ) எந்த அலைநீளங்களில் ஒளியை உமிழுமோ அதே அலைநீளங்களை குறைவான வெப்பநிலையில் உள்ளபோது அவ்வளிமம் உட்கவரும்” என்ற உண்மையை 1855 -ஆம் ஆண்டு கண்டறிந்தார்; இதை நான்காண்டுகளுக்குப் பின்னர் கீர்காஃப் ( Kirchoff ) ஆய்வுகளின் மூலம் உறுதி செய்தார். 1861- இல் ப்ரான்ஹோபர் வரிகளை ஆய்வு செய்ததில் சூரியனில் ஹைட்ரசன் உள்ளதை உறுதி செய்தார். ஆங்ஸ்ட்ராம் தன் அளவிடுதல்களை 10 −10 மீ அளவுகளில் செய்தார்; பின்னாளிலே, அவரை கவுரவப்படுத்தும் விதமாக 10 −10 மீ = 1 Å என்ற அலகு ஏற்படுத்தப்பட்டது. துருவ ஒளியின் நிறமாலையியல் பற்றியும் தன் ஆய்வுகளைச் செய்துள்ளார் ஆங்ஸ்டிராம்.[2]

விரைவான உண்மைகள் ஆண்டர்சு யோனாஸ் ஆங்ஸ்டிராம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

ஆண்டெர்சு ஜோனாசு ஆங்சுடிராம் மெடெல்பாட் நகரில் யோகான் ஆங்சுடிராமுக்குப் பிறந்து, ஆர்னோசந்து பள்ளியில் பயின்றார். இவர் 1833இல் உப்சாலாவுக்குப் போய் உப்சாலாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1839இல் இயற்பியலில் தேர்ச்சி பெற்றார். 1842இல் இவர் நடைமுறை வானியற் பணியில் பயிற்சிபெற ஸ்டாக்ஹோம் சென்றார். அடுத்த ஆண்டே அவர் உப்சாலா வான்காணகத்தின் பொறுப்பாளரானார்.[3]

புவியின் காந்தப்புலம் பற்றிய ஆர்வத்தால் சுவீடன் நாட்டின் பல பகுதிகளின் காந்தச் செறிவில் ஏற்படும் வேறுபாடுகளை அளந்து பதிவு செய்தார். இவருக்கு இசுடாக்கோல்ம் அறிவியல் கல்விக்கழகம் இப்பணிக்கான பொறுப்பைத் தந்தது. 1851முதல் 1853வரை உலகம் சுற்றி சுவீடிய பிரிகேட்டு யூகினீ என்ற கலத்தில் காந்த அளவீடுகள் எடுத்ததால் இப்பணியை தனது இறப்புக்குச் சற்று முன்புவரை முடிக்கமுடியவில்லை.

இவர் அடோல்ப் பெர்டினாண்டு சுவான்பர்கிற்குப் பிறகு 1858இல் உப்சாலா இயற்பியல் கட்டிலில் அமர்ந்தார். இவரது முதன்மையான ஆய்வுகள் வெப்பக் கடத்தலிலும் கதிர்நிரலியலிலும் அமைந்தன. இவர் அரசு சுவீடிய அறிவியல் கல்விக்கழகத்துக்கு 1853இல் அனுப்பிய ஒளியியல் ஆய்வுகளாகிய Optiska Undersökningar என்ற உரையில் மின்பொறித் தெறிப்பில் இருவகைக் கதிர்நிரல்கள் உள்ளன எனக் குறிப்பிட்ட்தோடு மட்டுமன்றி, இதில் ஒன்று மின்முனை பொன்மம் (metal) வெளியிட்டது என்றும் மற்றொன்று அது கடக்கும்/பாயும் வளிமம் வெளியிட்டது என்றும் தெளிவுபடக் கூறியுள்ளார்.மேலும் ஆயிலரின் ஒத்திசைவுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி வெண்சுடர் வளிமம் தான் உறிஞ்சவல்ல அதே அலைநீளக் கதிர்களையே வெளியிடுகிறது என்றும் காட்டினார். இக்கூற்று, 1872இல் அரசுக் கழகத்தின் இரம்ஃபோர்டு விருதை இவருக்குத் தந்தபோது, சர் எட்வார்டு சாபைனால் அறிவிக்கப்பட்டது. எனவே இவர் பிறகு பல ஆண்டுகளாக கண்டுகொள்ளபடாமல் இருந்தாலும் இவரே கதிர்நிரலியலின் முன்னோடியாவார்.

1861ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் சூரியக் கதிர்நிரலில் சிறப்புக் கவனம் செலுத்தலானார். இவர் ஒளிப்படவியலையும் கதிர்நிரலியலையும் இணைத்து சூரியக் குடும்பத்தை 1862இல் ஆய்வு செய்து சூரிய வளிமண்டலத்தில் பிற தனிமங்களுடன் நீரியம் உள்ளதைக் கண்டறிந்தார். அவர் 1868இல் இயல்புச் சூரியக் கதிர்நிரல் சார்ந்த 1000 கதிர்வரிகளை அளந்து விரிவான மிகப் பெரிய கதிர்வரையை Recherches sur le spectre solaire, எனும் ஆய்வுரையில் வெளியிட்டார். அவரது அளவீடு, 7000 அல்லது 8000 பங்கில் ஒரு பங்களவுக்கு அளவியின்குறைபாட்டால் பிழை உடையதாயினும், அலைநீளத்தைப் பொறுத்தவரை சரியானதாக அமைந்திருந்தது.

இவர் 1867இல் முதன்முதலாக வடமுனைச் சுடரொளியை ஆய்வு செய்தார். அதில் இவர் மஞ்சட்பசுமைப் பகுதியில் அமைந்த பொலிவுமிக்க கோட்டை அளந்தார்; இவரது இரிட்ஜ்பர்க் பெயரால் அழைக்கப்படும் 7000 அல்லது 8000 பங்கில் ஒரு பங்களவுக்கு பிழை உடையதாயினும் அதே கோடே அந்தியொளி வீச்சிலும் அமைந்துள்ளதெனத் தவறாகக் கருதியுள்ளார்.

இவர் பல ஆய்வுகழகங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1850இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்திலும் 1870இல் இலண்டனரசுக் கழகத்திலும் 1873இல் பிரெஞ்சு நிறுவனத்திலும் உறுப்பினரானார்.

இவரது மகனான, நட் ஆங்சுடிராம் (1857–1910), என்பவரும் ஓர் இயற்பியலார் ஆவார்.

இவர் 1874 ஜூன் 24ஆம் நாளன்று உப்சாலாவில் இயற்கை எய்தினார்.

Remove ads

தகைமைகள்

  • செறிந்த பொருளில் அளக்கப்படும் அலைநீளமும் அணுவிடைத் தொலைவும் அங்சுடிராம் அலகு (1 Å = 10−10 மீ) என இவரது பெயரால் வழங்கப்படுகின்றன.[4]
  • நிலாவின் எரிமலைவாய் ஒன்று ஆங்சுடிராம் எரிமலைவாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இவர் நினைவாக உப்சாலா பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடமொன்று ஆங்சுடிராம் ஆய்வகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads