சாலியர்
நெசவுத் தொழில் செய்யும் ஒரு சாதியினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலியர் (Saliyar அல்லது Saliya) எனப்படுவோர் தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இனக்குழுக்களுள் ஒருவர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கருநாடகா ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.[1][2][3]
Remove ads
தமிழகத்தில் வாழும் பகுதிகள்
இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராசபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி-சக்கம்பட்டி பகுதியிலும், அருகிலுள்ள டி. சுப்புலாபுரம் பகுதியிலும் நாகர்கோவிலில் வடசேரி பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவர்களின் இன்னொரு பிரிவு பத்மசாலியர் என்று அழைக்கப்படுகிறது. பத்மசாலியர் தங்களை பத்மபிராமின் என்று அழைக்கிறார்கள்.
மேலும் தமிழக சாலியர் காஞ்சிபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அதற்கும் முன்பாக ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள்.
இஸ்லாமிய படையெடுப்பின்போது தெற்கில் இடம்பெயர்ந்தனர்.
தற்போது தெற்கில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, திருநெல்வேலி, வடசேரி, ஈரோடு பகுதிகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும், தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
Remove ads
சிங்கள சாலியர்
இலங்கையிலுள்ள சிங்களவர்களிலும் சாலியர் என்னும் ஒரு சாதியினர் உள்ளனர். இவர்களின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய சாலியர் ஆவர். சிங்கள மொழியையே முதன்மொழியாகப் பேசும் இவர்கள் சிங்கள இனத்துக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்ட தமிழர்கள் ஆவர். இலங்கையிலுள்ள பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரின் உதவியினாலேயே இவர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது.
மற்ற மலையாள சாதிகளுடனான உறவு
கண்ணூரில் உள்ள பையனூர் தெருவின் ஒரு பகுதியான அஷ்டமச்சாள் பகவதி கோயில், மீனாமிருது என்ற தனித்துவமான திருவிழாவின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, இது கடந்த கால கடல் வர்த்தக கலாச்சாரத்துடன் தொடர்புடையது. இது கடந்த காலத்தில் இடங்கை சாதிக் குழுவைச் சேர்ந்த வளஞ்சியர் என்ற வணிக சமூகத்தைச் சேர்ந்ததாக நம்பப்பட்டது. இருப்பினும், இப்போது சாலியர்கள் இந்த சடங்கை நடத்துகிறார்கள். ஆனால் தற்போது வளஞ்சியர் மற்றும் சாலிய சமூகங்களுக்கு இடையிலான உறவு இன்னும் ஒரு ஊகமாகவே உள்ளது.[4]
நேச நாயனார்
கி.பி 400 முதல் 1000 வரையுள்ள ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார் சாலியர் ஆவார்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads