ஆந்தாலியா
துருக்கிய நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆந்தாலியா (Antalya) துருக்கியின் ஐந்தாவது மக்கள்தொகை மிக்க நகரமாகும். இதே பெயருள்ள மாகாணத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. அனத்தோலியாவின் வளமிக்க தென்மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ள ஆந்தோலியாவின் எல்லையாக தாரசு மலைத்தொடர் உள்ளது. ஆந்தோலியா பெருநகரப் பகுதியில் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வசிக்கின்றனர். [2][3]
இன்று ஆந்தாலியா நகரமாக விளங்கும் இவ்விடத்தில் முதன்முதலாக பொ.மு 200இல் பெர்காமோன் இராச்சியம் குடியிருப்பை அமைத்தது. விரைவிலேயே இது உராமானியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அவர்களது ஆட்சியில் அத்ரியனின் வாயில் போன்ற புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. சுற்றுப்புற நகர்களும் வளரத்தொடங்கின. பல முறை கைமாறிய இந்த நகரம் 1207இல் பைசாந்தியப் பேரரசு வசமும் 1391இல் உதுமானியப் பேரரசு வசமும் இருந்தது.[4] உதுமானியராட்சியில் அடுத்த 500 ஆண்டுகளுக்கு அமைதியும் நிலைத்தத்தன்மையும் நிலவியது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் இது இத்தாலியரின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டது. துருக்கிய விடுதலைப் போரின் விளைவாக புதிய சுதந்திர துருக்கியால் மீளவும் கைப்பற்றப்பட்டது.
ஆந்தாலியா துருக்கியின் பெரும் பன்னாட்டு கடலோர மகிழிடமாகும். நில நடுக்கடற்கரையோரத்தில் துருக்கிய ரிவேரா எனப்படும் இங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு அரசு பல மேம்பாட்டுத் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்த நகருக்கு வந்து சென்றுள்ளனர்.[5]
ஆந்தாலியாவில் 2015ஆம் ஆண்டு ஜி-20 மாநாடும் 2016 பன்னாட்டு வணிக கண்காட்சியும் (எக்ஸ்போ 2016) நடைபெற்றுள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads