ஆனந்தம் விளையாடும் வீடு
2021இல் வெளியான இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்தம் விளையாடும் வீடு ( Anandham Vilayadum Veedu ) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை நந்தா பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். சிறீவாரி பிலிம் தயாரித்திருந்தது.[1] இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோருடன் சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, இராசேந்திரன், சௌந்தரராஜா உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.[2][3] படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4]
Remove ads
கதைச் சுருக்கம்
இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்கள் தங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்கிறார்கள். ஆனால் ஒரு தீய மனிதன் குடும்பங்களுக்கு இடையே பிளவை உருவாக்க சதி செய்கிறான்.
நடிகர்கள்
- சக்தியாக கவுதம் கார்த்திக்
- முத்துப்பாண்டியாக சேரன்
- விஜியாக சிவாத்மிகா ராஜசேகர்
- காசியாக சரவணன்
- பழனிசாமியாக விக்னேஷ்
- கருப்பனாக டேனியல் பாலாஜி
- இராசேந்திரன் தொழிலாளி
- செல்வமாக சௌந்தரராஜா
- சக்கரபாண்டி, சக்தியின் தாய் மாமாவாக சிங்கம்புலி
- தர்மராஜ் வேடத்தில் சினேகன்
- பெரியம்பாளாக ஜோ மல்லூரி
- கருப்பனின் மாமாவாக நமோநாராயணன்
- காசியின் மனைவி தங்கமாக மௌனிகா
- அய்யனாராக முனிஷ்ராஜ்
- பாண்டியம்மாவாக நக்கலைட்ஸ் தனம்
- நக்கலைட்ஸ் செல்லா
- முத்துப்பாண்டியின் மனைவி வைரமாக சூசன்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு சித்துகுமார் இசையமைத்திருந்தார்.[5]
வெளியீடு
படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மிதமான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3][4][6][7][8][9][10]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads