ஆம்ஸ்டர்டம்

From Wikipedia, the free encyclopedia

ஆம்ஸ்டர்டம்
Remove ads

ஆம்ஸ்டர்டம் ஒலிப்பு, நெதர்லாந்து நாட்டின் தலைநகரமாகும். இந்நகரம், IJ bay, ஆம்ஸ்டல் என்ற இரு ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய மீனவ ஊராக ஆம்ஸ்டர்டம் உருவாக்கப்பட்டது. இன்று, இதுவே நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரமாகவும் பண்பாட்டு மற்றும் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது. ஆகஸ்ட் 1, 2006 நிலவரப்படி, ஆம்ஸ்டர்டமில் 741,329 மக்கள் வாழ்கிறார்கள். இதுவே, அண்டியுள்ள ஊர்களையும் உள்ளடக்கிய பெரு நகரான ஆம்ஸ்டர்டமையும் கணக்கில் கொண்டால் 15 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

விரைவான உண்மைகள் ஆம்ஸ்டர்டாம், நாடு ...

ஆம்ஸ்டர்மின் நகர மையம், ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் மையங்களில் ஒன்றாகும். இந்த நகர மையத்தின் வரலாறு 17ஆம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது.

Thumb
Amsterdam

ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்தின் தலைநகராக இருந்தபோதிலும் நெதர்லாந்தின் நீதிமன்றம், பாராளுமன்றம், அரசாங்க அமைப்புகள் போன்றவை இங்கு இல்லை. இவை அனைத்தும் டென் ஹாக் நகரில் இருக்கின்றன. தவிர, ஆம்ஸ்டர்டம், அது அமைந்திருக்கும் வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமும் அன்று. ஹார்லெம் நகரே வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமாகும்.

ஆம்ஸ்டர்டம், அதன் பன்முகத் தன்மை, பொறுத்துப் போகும் தன்மை, தாராளப் போக்கு ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது.

Remove ads

வரலாற்று மக்கள் தொகை

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆம்ஸ்டர்டாம் ஐரோப்பாவில் நான்காவது பெரிய நகரமாக இருந்தது, கான்ஸ்டான்டிநோபிள் (சுமார் 700,000), லண்டன் (550,000) மற்றும் பாரிஸ் (530,000) ஆகியவற்றின் பின்னணியில் இருந்தது. ஆம்ஸ்டர்டாம் தலைநகராகவோ அல்லது டச்சுக் குடியரசின் அரசாங்கத்தின் இடமாகவோ இல்லை, ஏனெனில் அது இங்கிலாந்து, பிரான்ஸ் அல்லது ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தை விடவும் மிகவும் சிறியதாக இருந்தது. அந்த மாநகரங்களுக்கு மாறாக, ஆம்ஸ்டர்டாம் லீடென் (67,000), ராட்டர்டாம் (45,000), ஹார்லெம் (38,000), மற்றும் உட்ரெக்ட் (30,000) போன்ற பெரிய நகரங்களாலும் சூழப்பட்டிருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நகர மக்களின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்தது, 1820 இல் 200,000 ஆக மாறியிருந்தது.19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், தொழில்மயமாக்கல் புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சியை தூண்டியது. 1959 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் மக்கள் தொகையில் 872,000 பேர் உயர்ந்தனர்.

1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில், ஆம்ஸ்டர்டாம் அதன் மிகப்பெரிய மக்கள்தொகை சரிவை சந்தித்தது, 1985 ஆம் ஆண்டில் 675,570 குடியிருப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். இது விரைவில் மறு நகர்ப்புறமயமாக்கப்பட்டது, இது 2010 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சிக்கு வழிவகுத்தது.இதனால் ஆராய்ச்சி, தகவல் மற்றும் புள்ளிவிவரம் ஆகியவற்றின் நகராட்சித் துறை 2020 ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சியில் ஒரு புதிய சாதனையை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது.

Remove ads

கட்டிடக்கலை

ஆம்ஸ்டர்டாம் ஒரு பெரும் கட்டிடக்கலை வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள மிகப்பழைய கட்டிடமான ஓடே கேர்க் (பழைய சர்ச்) என்பது வால்லேன்னின் பகுதியின் இதயத்தில் அமைந்துள்ளது, இது 1306 இல் பிரதிஷ்டை முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.ஆம்ஸ்டர்டாமில் உள்ள பழங்கால மர கட்டடம் பெகிஜின்ஹோஃப் பகுதியில் உள்ள ஹூட்டன் ஹூய்ஸ் என்பதாகும். இது சுமார் 1425 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் இரு மரத்தாலான கட்டிடங்களில் ஒன்றாகும். இது ஆம்ஸ்டர்டாமில் கோத்திக்(Gothic) கட்டிடக்கலைக்கு சில எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். 16 ஆம் நூற்றாண்டில், மர கட்டிடங்கள் அழிக்கப்பட்டன அதற்கு பதிலாக செங்கல்கள் பயன்பாட்டிற்கு வந்தன.இந்த காலகட்டத்தில், பல கட்டிடங்கள் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டன.ஆம்ஸ்டெர்டாம் விரைவில் தனது சொந்த மறுமலர்ச்சி கட்டமைப்பை உருவாக்கியது. இந்த கட்டிடங்கள் கட்டட வடிவமைப்பாளர் ஹென்ட்ரிக் டி கெய்ஸரின் கொள்கைகளின்படி கட்டப்பட்டுள்ளன.ஹென்ட்ரிக் டி கெய்ஸர் வடிவமைத்த மிக உறைக்கத்தக்க கட்டிடங்களில் ஒன்றுதான் வெஸ்டர்க்கெர்க். 17 ஆம் நூற்றாண்டில் பரோக் கட்டிடக்கலை மிகவும் பிரபலமானது. இது கிட்டத்தட்ட ஆம்ஸ்டர்டாமின் கோல்டன் வயதுடன் ஒத்துப்போனது. ஆம்ஸ்டர்டாமில் இந்த பாணியில் முன்னணி வடிவமைப்பாளர்கள் ஜேக்கப் வான் கேம்பன், பிலிப்ஸ் விங்போன்ஸ் மற்றும் டேனியல் ஸ்டால்பேயிர்ட் ஆகியோர்.பிலிப் விங்போன்ஸ் நகரம் முழுவதிலுமுள்ள வியாபாரிகளின் வீடுகளை அற்புதமாக வடிவமைத்தார். ஆம்ஸ்டர்டாமில் பரோக் பாணியில் ஒரு பிரபலமான கட்டிடம் டாம் சதுக்கத்தில் கட்டப்பட்ட ராயல் அரண்மனை. 18 ஆம் நூற்றாண்டு முழுவதும், ஆம்ஸ்டர்டாம் பிரெஞ்சு கலாச்சாரத்தால் பெரிதும் பாதித்க்கப்பட்டது. 1815 ஆம் ஆண்டில், கட்டிடக் கலைகளில் பரோக் பாணியை முற்றிலுமாக கைவிட்டு வெவ்வேறு புதிய பாணிகளில் கட்டத் தொடங்கினர்.

Remove ads

பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள்

ஆம்ஸ்டெர்டாம் நகரில் பல பூங்காக்கள், திறந்தவெளி இடங்கள் மற்றும் சதுரங்கள் உள்ளன. நகரில் உள்ள மிகப்பெரிய பூங்காவாக இருக்கும் வொண்டல்பெர்க், ஆட்-சூயிட் நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டின் ஆம்ஸ்டர்டாம் எழுத்தாளர் ஜொஸ்ட் வான் டென் வொண்டல் பெயரில் அமைக்கப்பெற்றது. ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை இந்த பூங்கா கொண்டுள்ளது. பூங்காவில் ஒரு திறந்த வெளி திரையரங்கு, ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் பல ஹொர்கா வசதிகள் உள்ளன. சூயிட் நகரில், பீட்ரிக்ஸ்ஸ்பார்க், ராணி பீட்ரிக்ஸின் பெயரில் அமைக்கப்பெற்றது. ஆம்ஸ்டர்டாம்ஸே போஸ் (ஆம்ஸ்டர்டாம் வனம்), ஆம்ஸ்டர்டாமின் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு இடம். ஆண்டுதோறும் சுமார் 4.5 மில்லியன் மக்கள் இந்த பூங்காவிற்கு வருகை தருகின்றனர், இது 1000 ஹெக்டேர் அளவுக்கு உள்ளது மற்றும் சென்ட்ரல் பார்கையும்விட மூன்று மடங்கு பெரிய இடத்தை உடைய வனம் இது ஆகும்.பிற பூங்காக்களில் டி பிஜ்ப் நகரிலுள்ள சர்ஃபடிபார்க், ஓஸ்டெர் நகரிலுள்ள ஓஸ்டெர்பார்க் மற்றும் வெஸ்டர்பார்க் நகரிலுள்ள வெஸ்டர்பார்க் ஆகியவை அடங்கும்.

ஆம்ஸ்டெர்டாம் துறைமுகம்

ஐரோப்பாவின் நான்காவது மிகப்பெரிய துறைமுகமான ஆம்ஸ்டெர்டாம் துறைமுகம், உலகின் 38 வது மிகப்பெரிய துறைமுகமும், நெதர்லாந்தில் மெட்ரிக் டன் சரக்குகளின் இரண்டாவது பெரிய துறைமுகமும் ஆகும். 2014 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டெர்டாம் துறைமுகத்தில் மொத்தமாக 97.4 மில்லியன் டன் சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.நெதர்லாந்தின் மிகப்பெரிய கப்பல் துறைமுகம் ஆம்ஸ்டர்டாம் துறைமுகம் ஆகும், ஒவ்வொரு வருடமும் 150 க்கும் மேற்பட்ட கப்பல்கள் இங்கு வருகின்றன.ஆம்ஸ்டர்டாம் பண்ட பரிமாற்றம் (AEX), (தற்போதய யூரோநெஸ்ட்டின் ஒரு பகுதியாக உள்ளது), உலகின் மிகப் பழைய பங்குச் சந்தை மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். நகர மையத்தில் அணை சதுக்கத்திற்கு அருகில் உள்ளது. ஆம்ஸ்டர்டாம் துறைமுகம், ஐந்தோவன் (பிரைய்ன் துறைமுகம்) மற்றும் ரோட்டர்டாம் (துறைமுகம்), ஆம்ஸ்டர்டாம் (விமான நிலையம்) ஆகியவை டச்சு பொருளாதாரத்தின் அடித்தளமாக அமைகின்றன.

Remove ads

சுற்றுலா

ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் ஆம்ஸ்டர்டாம், ஆண்டுதோறும் 4.63 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹோட்டல்கள் மூன்றில் இரண்டு பங்கு நகர மையத்தில் அமைந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில்லாத பார்வையாளர்களின் மிகப்பெரிய குழு அமெரிக்காவில் இருந்து வருகிறது, இது மொத்த தொகையில் 14% ஆகும்.

திருவிழாக்கள்

2008 ஆம் ஆண்டில், ஆம்ஸ்டர்டாமில் 140 திருவிழாக்கள் நடைபெற்றன. ஆம்ஸ்டர்டாமில் பிரபலமான திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பின்வருமாறு: கோனிங்ஸ்டாக் (2013 இல் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரின் முடிசூட்டு வரை கொங்கிங்கின்னடேக் என்ற பெயரிடப்பட்டது) (அரசரின் தினம் - ராணியின் தினம்); நிகழ்ச்சி கலைகளுக்கான ஹாலந்து விழா;கன்னாபீஸ் கோப்பை; மற்றும் உயிட்மார்க்ட் விழா. ஏப்ரல் 30 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்ட கோனிங்ஸ்டாக் விழா அன்று, ஆயிரக்கணக்கான மக்கள் ஆஸ்டெம்போர்க்குக்கு பயணம்செய்வர். இத்தினத்தில் முழு நகரமும் சந்தைகளில் இருந்து தயாரிப்புகளை வாங்குதல் அல்லது பல இசைக் கச்சேரிகளில் ஒன்றில் வருகை தருதல் என கொன்டாட்டத்தில் மூழ்கியிருக்கும்.

Remove ads

புவியியல்

காலநிலை

இது பெருங்கடல்க் காலநிலையைக் கொண்டது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Amsterdam Airport Schiphol, மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads