ஆயின்வார் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயின்வார் வம்சம் அல்லது ஆயின்வாரிகள் தற்கால இந்தியாவின் பிகார் மாநிலம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியான மிதிலை பிரதேசத்தை கி பி 1323 முதல் கி பி 1526 முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும்.[1] காசிபர் கோத்திரத்தைச் சேர்ந்த ஆயின்வார் மிதிலை பிராமண அரச குலத்தினர், மிதிலை பிரதேசத்தை, மதுபனி மாவட்டத்தில் உள்ள சுகௌனா எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு 200 ஆண்டுகள் ஆண்டனர்.[2][3] ஆயின்வார் வம்ச மன்னர்கள் மைதிலி மொழியையும், மைதிலி பண்பாட்டையும் போற்றி வளர்த்தனர்.
Remove ads
வரலாறு
ஆயின்வாரிகள், ஆயினி எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால் இவ்வம்சம் ஆயின்வார் வம்சம் என அழைக்கப்படுகிறது. [4] இப்பகுதியில் ஆட்சி செலுத்திய இராசபுத்திர குலத்தின் குறுநில மன்னர் வீழ்ந்த பின்னர், ஆயினி தாக்கூர் என்ற மிதிலை பிராமணர், கி பி 1407-இல் மிதிலை பிரதேசத்தைக் கைப்பற்றினார்.[5]
ஆட்சியாளர்கள்
ஆயினி தாக்கூரின் ஆட்சிக்குப் பின்னர் ஆயின்வார் வம்சத்தின் 20 மன்னர்களும், ராணிகளும் மிதிலை பிரதேசத்தை ஆண்டனர். கி பி 1526-இல் ஆயின்வார் வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்த, ஆயின்வார் வம்ச ஆட்சியாளரான சிவ சிங், மைதிலி மொழி வித்தியாபதி போன்ற அறிஞர்களைப் போற்றினார். ஜவுன்பூர் சுல்தான் சிக்கந்தர் ஷாவுடனான போரில் ஆயின்வார் வம்ச மன்னர் சிவ சிங் மாண்டார். [6]
வீழ்ச்சி
கி பி 1526-இல் இப்ராகிம் லோடியின் தந்தையான சிக்கந்தர் லோடிக்கும், மிதிலையின் ஆயின்வார் வம்ச மன்னர் இலக்குமிநாத சிங் தேவனுக்கும் நடந்த போரில், இலக்குமி நாத சிங் தேவனின் மறைவுடன் மிதிலையில் ஆயின்வார் வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது.[7] அக்பர் கி பி 1577-இல் ராஜா தர்பங்கா என்பவரை மிதிலைப் பிரதேசத்தின் ஆளுநனராக நியமிக்கும் வரை, இப்பிரதேசம் இராசபுத்திரர்களால் பங்கிடப்பட்டு, நிலையற்ற ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. [8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads