ததகதா ராய்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ததகதா ராய்
Remove ads

ததகதா ராய் (Tathagata Roy) (பிறப்பு: செப்டம்பர் 14, 1945) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2015 முதல் 2018 வரை திரிபுராவின் ஆளுநராகவும், ஆகஸ்ட் 2018 முதல் ஆகஸ்ட் 2020 வரை தனது பதவிக்காலம் முடியும் வரை மேகாலயாவின் ஆளுநராகவும் பணியாற்றினார்.[3] இவர், 2002 முதல் 2006 வரை பாரதீய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில பிரிவின் ஆறாவது தலைவராக இருந்தார்.[4] மேலும், 2002 முதல் 2015 வரை பாஜகவின் தேசிய நிர்வாக உறுப்பினராகவும் இருந்தார்.[5]

விரைவான உண்மைகள் ததகதா ராய், மேகாலாயாவின் 18வது ஆளுநர் ...

ராய் சிலகாலம் அருணாச்சல பிரதேச ஆளுநர் அலுவலகத்தில் 2016 ஜூலை முதல் 2016 ஆகஸ்ட் வரை கூடுதல் பொறுப்பைக் கொண்டிருந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் கலிகோ புல் பதவி விலகியைத் தொடர்ந்து புதிய முதலமைச்சராக பெமா காண்டுவுக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார். பயிற்சியின் மூலம் இவர் ஒரு பொறியியலாளராக இருக்கிறார். இவர், முன்னாள் பேராசிரியரும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பொறியியல் துறையின் நிறுவனத் தலைவருமாவார்.[5]

Remove ads

அரசியல்

இந்து தேசியவாதத்தின் சித்தாந்தமான இந்துத்துவத்த்தல் ஈர்க்கப்பட்டு 1986 இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) சேர்ந்தார். அரசுப் பணியை விட்டு வெளியேறிய இவர் 1990 ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் 2002இல் பாஜகவின் மேற்கு வங்க மாநில பிரிவின் தலைவராக ஆஷிம் கோஷுக்கு பிறகு நியமிக்கப்பட்டார். இவருக்குப் பிறகு சுகுமார் பானர்ஜி 2006 இல் தலைவரானார்.[6]

2009இல் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக மேற்கு வங்கத்தின் வடக்கு கொல்கத்தா தொகுதியில் நின்றுதோற்றார். இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலுக்கான தெற்கு கொல்கத்தா நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று, மொத்த வாக்குகளில் 25.29% வாக்குகளைப் பெற்றார். இவர் 12 மே 2015 அன்று திரிபுராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[7] பின்னர், ஆகஸ்ட் 2018 இல் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டு,[8] 2019 திசம்பர் வரை பணியாற்றினார். ஒரு குறுகிய மருத்துவ விடுப்புக்குப் பிறகு, மீண்டும் ஜனவரி 2020 முதல் 2020 ஆகஸ்ட் 18 வரை தனது ஐந்தாண்டு கால பதவியை நிறைவுசெய்து, தனக்குப் பின் ஆளுநரான சத்ய பால் மாலிக்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.[9]

Remove ads

குடும்பம்

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும் , மன்மோகன் சிங் அமைச்சரவையின் முன்னாள் நகர அபிவிருத்தி அமைச்சருமான சௌகதா ராயின் அண்ணன் ஆவார்.[6] கொல்கத்தாவின் பி.கே.சி கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த அனுராதாவை மணந்தார். இவர்களுக்கு மாலினி, மதுரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads