ஆவடி மாநகராட்சி
இந்தியாவில், தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில், 15வது மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆவடி மாநகராட்சி இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்து தமிழ்நாட்டின் 15ஆவதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சியாகும். 17 சூன் 2019 அன்று தமிழ்நாடு அரசு இதற்கான அவசர சட்டம் பிறப்பித்து அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[1][2]
Remove ads
ஆவடி மாநகராட்சிப் பகுதிகள்
புதிதாக நிறுவப்படவுள்ள ஆவடி மாநகராட்சி, தற்போது உள்ள ஆவடி நகராட்சியின் 48 வார்டுகளும் மற்றும் அதற்குட்பட்ட திருமுல்லைவாசல், கோவில்பதாகை, மிட்டனமல்லி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் அடங்கும்.[3][4] ஆவடி, அபட்டாபிராம், திருமுல்லைவாயில், மிட்டனமல்லி, பருத்திப்பட்டு, கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து, 2019ல், தமிழகத்தில் 15வது மாநகராட்சியாக, ஆவடி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ஆவடி மாநகராட்சியில் நான்கு மண்டலம், 48 வார்டுகள், 65 சதுர கி.மீ., பரப்பளவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஆவடி மாநகராட்சி விரிவாக்கம் செய்ய உள்ள பகுதிகள்
ஆவடி மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி என 3 நகராட்சிப் பகுதிகளும் மற்றும் 19 கிராம ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியில் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அக்டோபர் 2024ல் அறிவித்துள்ளது.[5]
Remove ads
ஆவடி மாநகராட்சி தேர்தல், 2022
2022-ஆம் ஆண்டில் ஆவடி மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முதன்முறையாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 43 வார்டுகளையும், அதிமுக 4 வார்டுகளையும் மற்றும் சுயேச்சை 1 வார்டையும் கைப்பற்றியது. மேயர் தேர்தலில் திமுகவின் ஜி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். [6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads