தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம், சட்டமன்றக் கூட்டத்தில் காவல் துறை மானியக்கோரிக்கையின் போது, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், 13 செப்டம்பர் 2021 அன்று, புதிதாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.[1][2][3]

1 சனவரி 2022 அன்று தாம்பரம் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் முறைப்படி துவக்கி வைத்தார். கூடுதல் தலைமை காவல் தலைவர் எம். ரவி தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராக பதவியேற்று இவரது பணி ஓய்விற்கு பின்னர் புதிய காவல் ஆணையராக கூடுதல் காவல் தலைவர் அமல்ராஜ் நியமிக்கபட்டுள்ளார்.. [4][5]

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் 20 காவல் நிலையங்கள் செயல்படும். முன்னதாக தாம்பரம் காவல் ஆணையரகத்தை நிறுவதற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் தலைவர் எம். இரவி இ. கா. ப நியமிக்கப்பட்டார். தாம்பரம் காவல் ஆணையரக அலுவலகம் தற்காலிகமாக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கட்டிடத்தில் அலுவலகம் செயல்படும்.

Remove ads

கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்கள்

சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் 13 காவல் நிலையங்களுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 காவல் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் இயங்கும்.[6][7][8]

சென்னை மாநகரக் ஆணையகரத்திலிருந்து இணைக்கப்பட்ட காவல் நிலையங்கள்

  1. தாம்பரம்
  2. குரோம்பேட்டை
  3. பல்லாவரம்
  4. பள்ளிக்கரணை
  5. சேலையூர்
  6. சிட்லப்பாக்கம்
  7. பீர்க்கன்கரணை
  8. குன்றத்தூர்
  9. கானாத்தூர்
  10. சங்கர்நகர்
  11. பெரும்பாக்கம்
  12. செம்மஞ்சேரி
  13. கண்ணகி நகர்

செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து இணைக்கப்பட்ட காவல் நிலையங்கள்

  1. கூடுவாஞ்சேரி
  2. ஓட்டேரி (வண்டலூர்)
  3. மறைமலைநகர்
  4. தாழம்பூர்
  5. கேளம்பாக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து இணைக்கப்பட்ட காவல் நிலையங்கள்

  1. சோமங்கலம்
  2. மணிமங்கலம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads