ஆஸ்ட்டர்

தாவரப் பேரினம் From Wikipedia, the free encyclopedia

ஆஸ்ட்டர்
Remove ads

ஆஸ்ட்டர் (Aster (genus) என்பது சூரியகாந்தி குடும்பத்தில் உள்ள பல்லாண்டு பூக்கும் தாவரங்களின் ஒரு பேரினமாகும். இந்தப் பேரினத்துக்கு உட்பட்ட தாவர இனங்களின் எண்ணிக்கை முன்பிருந்ததைவிட குறைக்கப்பட்டது. இப்போது இதில் சுமார் 170 இனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஐரோவாசியாவில் மட்டுமே உள்ளன; ஆஸ்ட்டரில் இருந்த பல இனங்கள் இப்போது ஆஸ்டெரியா குலத்தின் பிற வகைகளில் உள்ளன. ஆஸ்டர் அமெல்லஸ் என்பது ஆஸ்டெரேசி குடும்பம் மற்றும் பேரினத்தின் வகை இனமாகும்.[1]

விரைவான உண்மைகள் ஆஸ்ட்டர், உயிரியல் வகைப்பாடு ...

ஆஸ்ட்டர் என்ற பெயரானது பண்டைய கிரேக்கச் சொல்லான ἀστήρ என்பதிலிருந்து வந்தது ( astḗr ). இதன் பொருள் "விண்மீன்" என்பதாகும். இவற்றின் பூந்துணர் வடிவத்தைக் குறிப்பதாக இப்பெயர் உள்ளது. பல இனங்கள் மற்றும் பல்வேறு கலப்பினங்களோடு, கவர்ச்சிகரமானதாகவும், கண்கவர் பூக்களுள்ளதன் காரணமாக இவை தோட்டச் செடிகளாக பிரபலமாக வளர்க்கப்படுகின்றன. 'ஆஸ்டர்' இனங்கள் பல செதிலிறக்கை இனங்களின் குடம்பிகளுக்கு உணவுத் தாவரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்ட்டர் அனைத்து கடினத்தன்மையான மண்டலங்களிலும் வளரக்கூடியன.

Remove ads

வரலாற்றில்

1918 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் அங்கேரிய புரட்சியின்போது, புடாபெசுட்டு போராட்டக்காரர்கள் இந்தப் பூவை அணிந்ததால் அது " ஆஸ்ட்டர் புரட்சி " என்று அறியப்பட்டது.[3]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads