ஆ. மணவழகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆறுமுகம் மணவழகன் (A. Manavazhahan) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஆவார்.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
தொடக்க வாழ்க்கை
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 12 சூன் 1977 அன்று பெரியக்காள் - ஆறுமுகம்.இணையருக்கு மகனாகப் பிறந்தார் மணவழகன்.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்றார். அதன்பின் இளங்கலை தமிழ் இலக்கியத்தை ஆத்தூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் பெற்றார். முதுகலை தமிழ் மற்றும் ஆய்வியல் நிறைஞர் படிப்புகளை திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியக் கல்லூரியில் பயின்றார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
Remove ads
பணி
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்-கணினி ஆராய்ச்சியாளர் (2000-2004), தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளர் (2004-2005), திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் (SRM) தமிழ்த்துறைத் தலைவர் (2005-2011) ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
2011-ஆம் ஆண்டு சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 2013 முதல் இப்புலத்தின் இணைப் பேராசிரியராகவும், நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு அரசால் அந் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள [1] பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் உருவாக்கப்பணியில் அரசிற்குத் திட்டக் கருத்துரு வழங்கல், காட்சிப் பொருண்மை தேர்வு, காட்சி வடிவமைப்பு, காட்சிக்கூட அமைப்பு, ஒருங்கிணைப்பு, குறும்படம் தயாரிப்பிற்காக எழுத்துரு, நெறியாள்கை போன்ற பணிகளை மேற்கொண்டார். தற்போது அக் கூடத்தின் பொறுப்பாளராக உள்ளார்.
Remove ads
பங்களிப்புகள்
நூலாசிரியராக
பதிப்பாசிரியராக
குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள்
தமிழ்நாடு அரசின் நிதிநல்கையுடன்,[2] பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகளை உணர்த்தும் பத்து ஆவணப் படங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும்
தயாரித்துள்ளார்.
Remove ads
விருதுகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads