இசிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசிஸ் (Isis) பண்டைய எகிப்தின் பெண் கடவுள் ஆவார். பண்டைய எகிப்திய சமயத்தில் இசிஸ் பெண் கடவுளின் வழிபாடு பழைய எகிப்திய இராச்சிய (கிமு 2686–2181) காலத்தில் முதன்முதலாக அறியப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தினர் காலம் முடியவும் (கிமு 330 - கிமு32) மற்றும் அதனைத் தொடர்ந்து ரோமானியர்களின் எகிப்து மாகாணத்திலும் கிபி 600 முடிய இசிஸ் கடவுள் வழிபாடு விளங்கியது.[1][2][3]
ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை சேத் கடவுள் கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை, ஓசைரிசின் மனைவியும், பெண் கடவுளான இசிஸ் ஒன்றுசேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிஸ் ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு இசிசு இளைய ஓரசைப் பெற்றெடுத்தார். ஓரசு வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக சேத்தைப் பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.
Remove ads
இதனையும் காண்க
ஆதாரங்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads